
The Girlfriend Movie: ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி, அனு இம்மானுவேல் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் தி கேர்ள் ஃப்ரண்ட். இப்படம் கடந்த நவம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக, இவரது நடிப்பில் தெலுங்கில் வெளியான புஷ்பா-2 திரைப்படம், சுமார் ரூ. 2000 கோடி வரை வசூலித்து சாதனை படைத்ததாக கூறப்பட்டது.
இது தவிர இந்தியில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பிர் கபூருடன் இணைந்து இவர் நடித்த அனிமல் திரைப்படமும் ஏறத்தாழ ரூ. 800 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி தமிழில் விஜய், தெலுங்கில் மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்நிலையில், கதாநாயகியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தி கேர்ள் ஃப்ரண்ட் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: Arasan: வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி; சர்ப்ரைஸ் கொடுத்த கலைப்புலி தாணு
இதனால், கதைக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் ராஷ்மிகா மந்தனாவிடம் இருந்து மாறுபட்ட நடிப்பை எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கருதினர். அதற்கு ஏற்றார் போல் இப்படத்தின் கதைக்களமும் அமைந்தது. இக்கதையின் படி, பூமாதேவி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்தார். கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் பயின்று வரும் பூமாதேவிக்கும் மற்றும் அதே கல்லூரியில் பயிலும் விக்ரம் என்ற மாணவருக்கும் இடையே இருக்கும் உறவுமுறை குறித்து இப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
குறிப்பாக, மிகவும் டாக்ஸிக்கான ஒரு உறவில் இருந்து வெளியேற நினைக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல், சமூக பார்வை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை இப்படத்தில் பேசி இருப்பதாக கூறப்பட்டது. தனது முந்தைய திரைப்படங்களை விட இப்படத்தில் முகவும் முதிர்ச்சியான மற்றும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

மேலும் படிக்க: Dhurandhar: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் தெய்வத்திருமகள் சாரா; வயது வித்தியாசம் தொடர்பாக கேள்வி எழுப்பும் விமர்சகர்கள்
இதற்கு ஏற்றார் போல், ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டி இருந்தனர். மேலும், இதில் அவரது பாத்திரம் பல்வேறு இளம் பெண்களுடன் பொருத்திப் பார்க்கும் வகையில் அமைந்திருந்ததாக பார்வையாளர்களும் கூறினர். அந்த அளவிற்கு இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு திறமை மிகவும் பேசப்பட்டது. இதே போன்று, மாறுபட்ட கதாபாத்திரங்களில் அவரை காண விரும்புவதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இதனால், தி கேர்ள் ஃப்ரண்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
Meet Bhooma Devi, 𝚃̶𝚑̶𝚎̶ ̶𝙶̶𝚒̶𝚛̶𝚕̶𝚏̶𝚛̶𝚒̶𝚎̶𝚗̶𝚍̶ MA Literature :) ❤️ pic.twitter.com/0gNg7aMPW4
— Netflix India South (@Netflix_INSouth) November 30, 2025
அந்த வகையில், தி கேர்ள் ஃப்ரண்ட் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 5-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தி கேர்ள் ஃப்ரண்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. குறிப்பாக, தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதனால், திரையரங்குகளில் வெளியான போது இப்படத்திற்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பு, ஓடிடி வெளியீட்டின் போதும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com