
Stranger Things Season 5 in Tamil: இணையத் தொடர்களை (Web series) விரும்பி பார்ப்பவர்கள் இடையே மிகவும் பிரபலமான 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' (Stranger Things) தொடரின் 5-வது சீசன் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
பல்வேறு தரப்பு ரசிகர்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 இந்தியாவில் தற்போது ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்த தொடரின் இறுதி சீசன் என்பதால், நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் இடையே இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. லெவன் மற்றும் அவரது நண்பர்களின் சாகச பயணத்தை விளக்கும் விதமாக இந்த தொடர் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் சீசன் 4-ன் முடிவுக்கு பிறகு, வெக்னா (Vecna) எங்கே போனான், அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை அறிய ரசிகர்கள் 2022 முதல் காத்திருந்தனர். இந்தக் காத்திருப்புக்கு ஒரு முடிவு வந்துவிட்டது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த தொடரின் ஐந்தாவது சீசனை ஓடிடி தளத்தில் இன்று முதல் நீங்கள் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Aan Paavam Pollathathu OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' சீசன் 5 கதை, 1987-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் நடக்கிறது. ஹாக்கின்ஸ் (Hawkins) நகரில் வெக்னா ஏற்படுத்திய விளைவுகள் நகரை சேதப்படுத்திய நிலையில், லெவன் மற்றும் அவளுடைய நண்பர்கள் ஒரே இலக்குடன் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். அதன்படி, வெக்னாவை தேடும் பயணத்துடன் இந்த தொடர் அமைகிறது. சக்தி வாய்ந்த இந்த பயணம் ஆபத்துகளையும் கொண்டுள்ளது.
🍋🌶️ pic.twitter.com/gjH7cmh77G
— Netflix India (@NetflixIndia) November 26, 2025
மேலும் படிக்க: Aaryan OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் ஆர்யன் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
இத்தொடரின் ஐந்தாவது சீசனிலும் உங்கள் அபிமான நடிகர்கள் இடம்பெறுகின்றனர். இதில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் விவரங்களை பார்ப்போம்.
Stranger Things 5 Vol. 1 has 4 episodes out NOW ❤️🔥
— Netflix India (@NetflixIndia) November 27, 2025
- Chapter One: The Crawl
- Chapter Two: The Vanishing of…
- Chapter Three: The Turnbow Trap
- Chapter Four: Sorcerer
ரசிகர்களின் ஆதரவை பெற்ற ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் 5-வது சீசன் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. குறிப்பாக நான்காவது சீசனின் முதல் பாகத்தை இன்று காலை 6:30 மணி முதல் பார்க்கலாம். இதில் நான்கு எபிசோட்கள் இடம்பெறும்.
இதன் இரண்டாவது பாகத்தை டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி காலை 6:30 மணி முதல் காணலாம். இந்த பாகத்தில் மூன்று எபிசோட்கள் இடம்பெறவுள்ளன. 5-வது சீசனின் இறுதி எபிசோடை, ஜனவரி மாதம் 1-ஆம் தேதி காலை 6:30 மணி முதல் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
11:11 pic.twitter.com/0yD6gUkxIT
— Netflix India (@NetflixIndia) November 26, 2025
இந்த தொடரை ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் கண்டு மகிழலாம். குறிப்பாக, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் காணலாம். ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடருக்கு பெருமளவு ரசிகர்கள் இருப்பதால், அடுத்த சில நாட்களுக்கு இத்தொடர் பேசுபொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com