சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி விரைவில் தொடங்கவுள்ளது. நீயா நானா, சூப்பர் சிங்கர், பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 சில் மாதங்களுக்கு முன்பு முடிந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. ஏற்கெனவே நடுவர்கள், புதிய கோமாளிகளின் ப்ரோமோ வெளியிட்ட விஜய் டிவி அடுத்ததாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய ப்ரோமோவை பகிர்ந்துள்ளது. குறிப்பாக வரும் மே 4 ஆம் தேதி இரவு 8 மணிக்கு குக் வித் கோமாளி சீசன் 6 முதல் எபிசோட் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குக் வித் கோமாளி போட்டியாளர்கள்
ஆறாவது சீசனின் முதல் போட்டியாளராக சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி இராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். கோமாளி ராமர் ஒருமுறை லட்சுமி இராமகிருஷ்ணன் போல் வேடமிட்டு என்னம்மா இப்படி பண்றீங்களேமா என பேசியது வைரலான நிலையில் நிகழ்ச்சியில் இருவருக்கும் இடையெ பெரிய கலாட்டா நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குக் வித் கோமாளி : ஷபானா ஷாஜகான்
ப்ரோமோவில் புகழும், குரேஷியும் ஒரு ஒரு போட்டியாளர்களாக அறிவித்தனர். இரண்டாவது போட்டியாளர் சீரியல் நடிகை ஷபானா ஷாஜகான் ஆவார். இவர் செம்பருத்தி, மனைவி போன்ற சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். பாக்கியலட்சுமி சீரியலிலும் தோன்றி இருக்கிறார். இந்த சீசன் குக் வித் கோமாளி GEN Gold Vs GEN Bold என குறிப்பிட்டுள்ளனர். அதன்படி சீனியர் லட்சுமி இராமகிருஷ்ணனை தொடர்ந்து ஷபானா ஷாஜகான் போட்டியாளராக களமிறக்கப்படுகிறார்.
யார் அந்த CONTESTANTS..? 😲 | Cooku with Comali Season 6 😃 மே 4 இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Gen Gold Vs Gen Bold | Vijay Television | Vijay TV pic.twitter.com/tNAHO4CwER
— Vijay Television (@vijaytelevision) April 30, 2025
ரோசாப்பூ பிரியா ராமன்
சூரியவம்சம், வள்ளி, ஹரிச்சந்திரா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவரான நடிகை பிரியா ராமன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நான்காவது போட்டியாளர் உமர் லத்தீப் என்கின்றனர். மொத்தம் பத்து போட்டியாளர்கள் இந்த சீசனில் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. மீதமுள்ள போட்டியாளர்களின் விவரம் வரும் மே 4ஆம் தேதி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தெரியவரும். மற்ற போட்டியாளர்கள் யார் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation