herzindagi
image

Bison OTT Release Date: மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படத்தை எந்த ஓடிடி தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Bison OTT Release Date: பைசன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஓடிடியில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Editorial
Updated:- 2025-11-17, 12:27 IST

Bison OTT Release Date: மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர், லால், ரெஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பைசன் திரைப்படம், ஓடிடியில் வெளியாக உள்ளது.

பைசன் திரைப்படம்:

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பைசன். இந்த திரைப்படத்தை நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். கபடி விளையாட்டில் இந்திய அளவில் பல சாதனைகள் படைத்த கணேசன் என்பவரது வாழ்க்கை பயணத்தை கருவாக கொண்டு இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார்.

மேலும் படிக்க: Actress Anupama Parameswaran: நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு; தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது பெண் கைது

 

பாராட்டுகளை பெற்ற பைசன் திரைப்படம்:

 

இப்படம் வெளியானது முதலே விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. தென்மாவட்டங்களில் நிகழும் சாதிய பாகுபாடுகளை கடந்து கபடி விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞனின் கதாபாத்திரத்தை துருவ் விக்ரம் ஏற்று நடித்தார். இந்த திரைப்படத்திற்காக சுமார் மூன்று ஆண்டுகள் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டதாக கூறிய துருவ் விக்ரம், இதற்காக கபடி விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டார். அவரது நடிப்பிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், பசுபதி, அமீர், லால் உள்ளிட்ட அனைவரின் நடிப்பும் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தன.

மேலும் படிக்க: Bigg Boss Tamil Season 9 Contestants Salary: பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

 

சாமானிய ரசிகர்கள் தொடங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பைசன் திரைப்படம் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக கூறினர். இது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பைசன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, வெளியாகி ஒரு மாதம் கடந்த பின்னரும் தற்போது வரை இப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. உலகளவில் ஏறத்தாழ ரூ. 70 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் பைசன் திரைப்படம்:

 

இதனால் பைசன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில், வரும் நவம்பர் 21-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பைசன் திரைப்படம் வெளியாகிறது. குறிப்பாக, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதன் மூலம் ஏற்கனவே பைசன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களும், திரையரங்கில் காணத் தவறவிட்டவர்களும், ஓடிடியில் இதனைக் காண காத்திருக்கின்றனர். இந்நிலையில், திரையரங்குகளில் பைசன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஓடிடி வெளியீட்டின் போதும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com