குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் : அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான தகவல்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படமும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்பட்ம தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, சிம்ரன், சலார் கார்த்திகேயா, பிரியா பிரகாஷ் வாரியர், பிரபு, ஜாக்கி ஷெராப், டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை நெட்பிளிக்ஸ் தளம் அறிவித்துள்ளது. குட் பேட் அக்லி திரைப்படம் இந்தியில் ரிலீஸ் தவிர்க்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ்

குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீசான நிலையில் திரையரங்குகளில் ஒரு மாதம் நிறைவு செய்ததையடுத்து தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 8ஆம் தேதி ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ஒரே நேரத்தில் காண முடியும். நெட்பிளிக்ஸ் தளம் ஏற்கனெவே அஜித்திடன் விடாமுயற்சி திரைப்படத்தை ஸ்ட்ரீமிங் செய்திருந்தது.

குட் பேட் அக்லி நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் வசனத்தைப் பகிரந்து ஓடிடி ரிலீஸ் தேதியை தெரிவித்துள்ளனர். மே 8ஆம் தேதி சம்பவம் இருப்பதாக பகிர்ந்துள்ளனர்.

குட் பேட் அக்லி வசூல்

குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 31 கோடி ரூபாய் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு உலகளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. தமிழக விநியோகஸ்தர் தரப்பில் 2 வாரத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 172.3 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி, கேஞ்சர்ஸ் ஆகிய படங்கள் வெளியானாலும் குட் பேட் அக்லி படத்திற்கு காட்சிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலையில் குட் பேட் அக்லி ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

சென்னையில் இருக்கும் நடிகர் அஜித் சிறிது ஓய்வுக்கு பிறகு மீண்டும் கார் பந்தயத்திற்காக வெளிநாடு செல்லவுள்ளார். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அஜித்தின் அடுத்த பட பணிகள் தொடங்கும். ஆதிக் ரவிச்சந்திரன் அல்லது கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP