
Bad girl OTT release: தமிழில் சமீபத்தில் மாறுபட்ட கதையம்சத்தில் வெளியான பேட் கேர்ள் திரைப்படம், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Kantara Chapter 1 OTT release: ஓடிடியில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
அறிமுக இயக்குநரான வர்ஷா இயக்கத்தில் உருவான இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் இணைந்து வெற்றிமாறனின் கிராஸ்ரூட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்தனர். அஞ்சலி சரவணன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

ரம்யா என்ற பெண்ணின் இளமைக் கால வாழ்க்கையை ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் பேசும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான போது பல விமர்சகர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றாலும், சிலர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலாசார ரீதியாக இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் பேட் கேர்ள் திரைப்படம் வெளியானது. அதன்படி, விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டுகளை பெற்றது. இதனால், பேட் கேர்ள் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து எதிர்பார்ப்பு நிலவியது.

Some stories are too ‘bad’ to ignore ✌🏽#BadGirl streaming from November 4 only on JioHotstar#BadGirlStreamingFromNov4 #BadGirlOnJioHotstar #JioHotstar #JioHotStarTamil @varshabharath03 #VetriMaaran @AnuragKashyap72 @ItsAmitTrivedi @grassrootfilmco #AnjaliSivaraman… pic.twitter.com/7Vw3BMmbrc
— JioHotstar Tamil (@JioHotstartam) October 27, 2025
இந்நிலையில், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 4-ஆம் தேதியன்று பேட் கேர்ள் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் பேட் கேர்ள் திரைப்படத்தை காணலாம். இப்படத்திற்கு ஓடிடி வரவேற்பு எப்படி இருக்கும் என பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: YouTube
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com