
Arasan: அரசன் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளார் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். 1987-ஆம் ஆண்டு ராஜன் கொலை சம்பவத்தில் இருந்து தொடங்கும் இப்படம், அதன் பின்னர் அந்தக் கொலையில் தொடர்புடையவர்களின் வாழ்க்கை மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக உருவாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, 1987-ஆம் ஆண்டில் இருந்து சமகால அரசியல் வரை பல நிகழ்வுகளை இப்படத்தில் வெற்றிமாறன் பதிவு செய்திருந்தார்.
இந்த திரைப்படம் வெற்றிமாறன் திரைப்பயணம் மட்டுமின்றி நடிகர் தனுஷுக்கும் மிக முக்கிய படமாக அமைந்தது. மேலும், இப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்புகின்றனர். தனது தற்போதைய படங்களின் பணிகள் முடிவடைந்ததும், வடசென்னை இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்படலாம் என்று வெற்றிமாறனும் கூறி இருந்தார். இந்த சூழலில், கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில், அரசன் என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
மேலும் படிக்க: Dhurandhar: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் தெய்வத்திருமகள் சாரா; வயது வித்தியாசம் தொடர்பாக கேள்வி எழுப்பும் விமர்சகர்கள்
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது. அதில், வடசென்னை திரைப்படத்தின் ஒரு பகுதியாக அந்த காலகட்டத்தில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, அரசன் திரைப்படம் உருவாக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையில் அமைந்த இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளுக்கு ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது. மேலும், இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமான அப்டேட் ஒன்றை அரசன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார்.
அரங்கம் அதிர்ந்தது
— Kalaippuli S Thanu (@theVcreations) October 17, 2025
ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது
இன்று "YouTube-ல்
உலகம் மெச்சிடும்
உச்சி முகர்ந்திடும்
Arasan - https://t.co/7Iyyi8jzVL#VetriMaaran @SilambarasanTR_ @anirudhofficial #SilambarasanTR#STR49 #VCreations47#ARASAN
அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஏனெனில், ஏற்கனவே சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் அவரது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது. இதேபோல், கடந்த 2018-ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சிலம்பரசன் ஆகியோர் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
மனிதம் இணைகிறது
— Kalaippuli S Thanu (@theVcreations) November 25, 2025
மகத்துவம் தெரிகிறது#VetriMaaran @SilambarasanTR_@VijaySethuOffl @anirudhofficial #SilambarasanTR #ARASAN pic.twitter.com/PlO6lqPs71
அரசன் திரைப்படம் தொடர்பாக கோலிவுட் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே, விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். இதனிடையே, வடசென்னையின் ஒரு அங்கமாக அரசன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது, இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது. ஏனெனில், வடசென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் அமீர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
இதுமட்டுமின்றி, வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையான ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறன் முதன்மையானவர். இதனால், அவரது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியானாலும் பெருமளவு பேசுபொருளாக மாறும். அதன்படி, சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதி என நட்சத்திர அந்தஸ்து கொண்ட இரண்டு நடிகர்கள், அரசன் திரைப்படத்தில் இணைந்திருப்பது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்திருக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com