herzindagi
image

Pushkar Gayathri Exclusive: திரைக்கதை எழுதுவது கஷ்டமா? படம் எடுப்பது கஷ்டமா? பிரபல இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி சிறப்பு பேட்டி

புஷ்கர் காயத்ரி சென்னையை சேர்ந்த கணவன் மனைவி திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இந்த நிலையில் சுழல் 2 வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி நம் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.
Editorial
Updated:- 2025-04-20, 22:50 IST

ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர்கள் கணவன் மனைவியும் ஆன புஷ்கர் காயத்ரி. இவர்கள் திரைப்படங்கள் மட்டும் அல்லாது ஓடிடியில் வெப் சீரிஸ் எழுதி இயக்கியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்கள். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 2022 ஆம் ஆண்டு நடிகர் கதிர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான சுழல் வெப்சீரிஸின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் சுழல் 2 வெப்சீரிஸ் ரிலீசானது. அந்த வரிசையில் புஷ்கர் காயத்ரி சென்னையை சேர்ந்த கணவன் மனைவி திரைப்பட இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். இந்த நிலையில் சுழல் 2 வெப் சீரிஸின் வெற்றியை தொடர்ந்து பிரபல தமிழ் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி நம் ஹெர் ஜிந்தகி தமிழ் குழுவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.

பாலிவுட், ஹாலிவுட்டில் பல நகம் கடிக்கும் வெப்சீரிஸ்கள் உள்ளன. ஆனால் கோலிவுட்டில் மட்டும் ஏன் இது போன்ற வெப்சீரிஸ்கள் குறைவாகவே உள்ளன? முன்னணி நடிகர்கள் ஏன் வெப்சீரிஸ்களில் நடிப்பதில்லை?


மேற்கத்திய நாடுகளில் "House of Cards" போன்ற வெப்சீரிஸ்கள் முன்பே தொடங்கிவிட்டன. ஹிந்தியில் "Sacred Games" ஒரு பிரபலமான வெப்சீரிஸ். தமிழில், சூழல் தான் எனக்கு தெரிந்த முதல் பெரிய வெப்சீரிஸ் ஆகும். இந்த ஃபார்மேட் இங்கு ஆரம்பித்து 4 - 5 வருடங்களே ஆகிறது. இது இன்னும் பிரபலம் ஆக இன்னும் சிறிது நாட்கள் ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் மெயின்ஸ்ட்ரீம் நடிகர்களும் வெப்சீரிஸ் நடிக வருவார்கள். இதனால் தியேட்டர் மற்றும் OTT ஒன்றையொன்று அழிக்காமல் இணைந்தே நிலைக்கும்.

எழுத்து vs இயக்கம் – எது கடினம்? ரைட்டர்ஸ் பிளாக்கை எப்படி சமாளிக்கிறீர்கள்?


இரண்டுமே கடினம்! படம் எடுப்பது எளிதான கலை அல்ல. ஸ்கிரிப்ட் கிராக்கிங் நீண்ட நேரம் எடுக்கும். ஒரு படம் அல்லது வெப்சீரிஸ் இயக்கும்போது ஸ்கிரிப்ட் இருந்தால் தான் அதைப் பின்பற்றலாம். ஆனால் எழுத்து எப்போதும் சவாலானது. சில நேரத்தில் சரியான டைரக்ஷன் டீம் இல்லை என்றல் இயக்கம் தான் அதிக கடினம். ரைட்டர்ஸ் பிளாக்கை சமாளிக்க ஒரே நேரத்தில் இரண்டு ஸ்கிரிப்ட்களில் வேலை செய்கிறோம். ஒன்றில் முட்டினால், மற்றொன்றுக்கு மாறி வேலை செய்வோம்.

gayathri-pushkar

ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் பணியாற்ற ஆசை உண்டா? எந்த ஜானர் தேர்வு செய்வீர்கள்?


எந்த தமிழ் இயக்குநருக்கு தான் இவர்களுடன் பணிபுரிய ஆசை இருக்காது? ஆனால் ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களுக்கென தனி ஜானர் உள்ளது. அது போன்ற கதை எழுதினால் தான் அவர்களை அணுக முடியும்.


திரைப்படங்களின் வசூல் பிரச்சனை எந்த அளவிற்கு பாதிக்கும்? ஒரு படத்தின் ரிலீஸ் டைமிங் முக்கியமா?


இப்போது படம் பார்ப்பவர்கள் பெரிய நடிகர் படங்களை தியேட்டரில் பார்க்கிறார்கள். சிறிய படங்களை OTTயில் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். ரிலீஸ் டேட் மிக முக்கியம். பெரிய படங்களுடன் க்ளாஷ் ஆனால் அந்த படத்திற்கு பிரச்சனை ஏற்படும். ஆனாலும் சில இயக்குனர்களுக்கு ஓடிடி கிடைத்து ஒரு வரம் தான். அவர்கள் படங்களை இன்னும் எளிதில் ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க முடிகிறது.

Gayatri-Pushkar_e

சினிமா சேன்சர்ஷிப் பற்றி ஒரு சில வார்த்தைகள்; இந்தியன் சினிமாவில் கிரியேடிவ் ஃபிரீடம் உண்டா?


CBFC விதிகள் கடுமையானவை. கலாச்சார, அரசியல் பிரச்சனைகளுக்காக காட்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது கிரியேட்டிவிட்டியை பாதிக்கிறது. ஆனால் இந்திய சினிமாவிற்கு ஒரு அளவு சுதந்திரம் உண்டு என்று தான் நினைக்கிறன்.


கணவன் மனைவியாக சேர்ந்து சினிமாவில் பணிபுரிவது எப்படி இருக்கு?


நாங்கள் கல்லூரியில் இருந்தே ஒன்றாக வேலை செய்கிறோம். கல்லூரி காலத்தில் ஒரு நியூஸ் லெட்டரில் இருவரும் எடிட்டர்ஸ் ஆக வேலை செய்தோம். எங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஐடியாக்கள், படங்களைப் பற்றிய விவாதங்கள் தான். இது எங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

மேலும் படிக்க: Actor Manikandan Exclusive: சினிமாவை விட்டு நான் போக நினைச்சாலும் சினிமா விடாது; குடும்பஸ்தன் பட அனுபவம் பகிரும் மணிகண்டன்

"ஓரம் போ", "வா க்வார்ட்டர் கட்டிங்" போன்ற டார்க் காமெடி படங்கள் எடுக்க ஐடியா எப்படி துவங்கியது?


அமெரிக்காவில் படித்த பிறகு சென்னைக்கு திரும்பியபோது, எல்லாமே புதிதாக இருந்தது. அந்த ஸ்ட்ரீட் கல்சர், வெயில் எல்லாம் எங்களை கவர்ந்தது. அப்போது தமிழில் டார்க் காமெடி படங்கள் குறைவாக இருந்தது. அப்போது நாங்கள் யூனிக் கன்டென்ட் படங்கள் செய்ய விரும்பினோம்.

e59c72b8cf529ea2c3151e75c9a31c274d49a193b3226039fae6fa9f358f18e1

பிசி ஸ்ரீராம், மானவ் மேனன் உடன் வேலை செய்த அனுபவம் பற்றி சொல்லுங்க?


விளம்பரத் துறையில் வேலை செய்வது இயக்கம் கற்றுக்கொள்ள ஒரு ஷார்ட்கட் என்று தான் சொல்ல வேண்டும். குறுகிய காலத்தில் ப்ரீ ப்ரொடக்ஷன் முதல் எடிட்டிங் வரை அனைத்தும் கற்றுக்கொள்ளலாம். அவர்களுடன் வேலை செய்வது ஒரு கனவு போல இருந்தது.


படம் vs வெப்சீரிஸ்; ஸ்கிரீன்ப்ளே வித்தியாசம் என்ன?


வெப்சீரிஸ் கதை எழுதுவது மிகவும் சவாலானது. ஒவ்வொரு எபிசோட்டிலும் டிராமாவை வைத்துக்கொண்டு, முழு சீசனின் ஆர்க்கையும் ரெடி பண்ண வேண்டும். திரைப்படத்தை விட இதில் ரசிகர்களின் கவனம் திசை திருப்புவது எளிது.


நடிகர் மணிகண்டனுடன் வரும் புதிய படம் எந்த ஜானர்?


மணிகண்டன் ஒரு திறமை வாய்ந்த நடிகர் மட்டுமில்லை ஒரு எழுத்தாளரும் கூட. நடிகர் மணிகண்டனை எங்களுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும். அவர் எங்களிடம் சமூக கருத்தோடு கலந்த ஒரு த்ரில்லர் கதை பிட்ச் செய்துள்ளார். அதை கண்டிப்பாக நாங்கள் தயாரிக்க உள்ளோம். ஆனால் அதை பற்றி இன்னும் விவரங்களை இப்போது பகிர முடியாது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com