
Aan Paavam Pollathathu: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா ஆகியோர் நடிப்பில் உருவான ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்த திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் ஆகிய இருவரும் முன்னதாக ஜோ என்ற திரைப்படத்திலும் இணைந்து நடித்திருந்தனர். அந்த திரைப்படத்திற்கு பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உருவானது. அதற்கு ஏற்றார் போல், ஆண்பாவம் பொல்லாதது திரைப்படமும் நகைச்சுவை பாணியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக விமர்சனங்களில் தெரிவிக்கப்பட்டது. இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கி இருந்தார்.
புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் இடையே நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. சிவா (ரியோ ராஜ்) என்ற சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியருக்கும், சக்தி (மாளவிகா மனோஜ்) என்ற கோவையைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுகிறது. இவர்கள் இருவரின் வாழ்க்கையும் சீராக சென்று கொண்டிருந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே எழும் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரச்சனைகள் உருவாகிறது.

மேலும் படிக்க: Aaryan OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் ஆர்யன் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
ஒரு கட்டத்தில் இந்த முரண்பாடு விவாகரத்து கோரும் அளவிற்கு வருகிறது. அந்த வகையில், இவர்கள் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனைகளுக்கான காரணம், அதன் விளைவுகள் மற்றும் தம்பதி இருவரும் இறுதியில் இணைந்தார்களா என்பதற்கான விடையை நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமாக திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி இருந்தனர். இயல்பாகவே ரியோ ராஜுக்கு நகைச்சுவை நன்றாக வரும் காரணத்தினால், இப்படத்திற்கு அவரது நடிப்பு கூடுதல் பலமாக அமைந்தது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது பெருவாரியாக நேர்மறையான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக, இன்றைய சூழலில் இளம் தலைமுறையினர் இடையே இருக்கும் பிரச்சனையை சுவாரஸ்யமாக நகைச்சுவை பாணியில் எடுத்துரைத்ததாக பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். எனினும், மற்றொரு புறம் இப்படத்திற்கு சிலரிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் பெறப்பட்டது.
சில காட்சிகள் இயல்பாக இல்லாமல் நகைச்சுவைக்காக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக கருத்துகள் முன்வைக்கப்பட்டன. மேலும், திருமண உறவில் ஆணின் பார்வையில் இருந்தே பெரும்பாலான கருத்துகள் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும், இந்த கலவையான விமர்சனம், இப்படத்தின் வசூலை பாதிக்கவில்லை. நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்கள் இல்லையென்றாலும், இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல கலெக்ஷன் செய்தது. ஏறத்தாழ ரூ. 30 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஆண்பாவம் பொல்லாதது 😜😎🤓#AanPaavamPollathathu streaming from November 28 only on JioHotstar #JioHotstar #AanPaavamPollathathuOnJioHotstar #AanPaavamPollathathuStreamingFromNov28 #JioHotStarTamil @rio_raj @imalavikamanoj @kalaiyinkural @RjVigneshkanth @Music_Siddhu pic.twitter.com/WbnEwsCoLL
— JioHotstar Tamil (@JioHotstartam) November 26, 2025
மேலும் படிக்க: Arasan: வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி; சர்ப்ரைஸ் கொடுத்த கலைப்புலி தாணு
இதனால் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்று பலரும் ஆர்வமாக காத்திருந்தனர். அந்த வகையில், இப்படத்தை நவம்பர் 28-ஆம் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்தை காணலாம். திரையரங்குகளில் வெளியான போது இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, ஓடிடி வெளியீட்டின் போதும் கிடைக்குமா என்ற கேள்வி பார்வையாளர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com