
The Family Man Season 3 release date: இணைய தொடர்கள் (வெப் சீரிஸ்) காண்பவர்களுக்கு இடையே தி ஃபேமிலி மேன் தொடரின் முந்தைய பாகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இந்த தொடரின் அடுத்த பாகமான சீசன் 3-ன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் ராஜ் & டிகே ஆகியோர் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த இணையத் தொடரில் மனோஜ் பாஜ்பாய், ஜெய்தீப் அஹல்வாத், பிரியாமணி, நிம்ரத் கௌர் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) ஓடிடி தளத்திற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த இணையத் தொடர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவற்றை கதைக்களமாக கொண்டது.
இதுவரை இந்த தொடரில் இரண்டு பாகங்கள் வெளியாகி இருக்கின்றன. கதையின் நாயகனாக ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கிறார். தேசிய புலனாய்வு முகமையின் ஒரு அங்கமாக காண்பிக்கப்படும் டாஸ்க் (TASC - Threat Analysis and Surveillance Cell) பிரிவில் பணியாற்றும் அவர், தனது பணியில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டிருந்தது.
எனினும், பணியின் நிமித்தமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் எழும் பிரச்சனைகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் இடையே எழும் உளவியல் ரீதியான சிக்கல்கள் ஆகிய கிளைக்கதைகளையும் இதன் முந்தைய பாகங்கள் கொண்டிருந்தன. இதன் முதல் பாகத்தில் தீவிரவாத தாக்குதலை, டாஸ்க் குழுவினர் கண்டறிந்து அதனை எவ்வாறு தடுக்கின்றனர் என்பது குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்திற்கு விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
They'll make you stop and stair 👀#TheFamilyManOnPrime, New Season, November 21 pic.twitter.com/pTYi10o4hv
— prime video IN (@PrimeVideoIN) November 20, 2025
மேலும் படிக்க: Bison OTT Release Date: மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படத்தை எந்த ஓடிடி தளத்தில், எப்போது பார்க்கலாம்?
இதன் தொடர்ச்சியாக, இந்த இணையத் தொடரின் அடுத்த பாகம், கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. இந்த சீசனில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்தது கூடுதல் கவனத்தை ஈர்த்தது. முந்தைய பாகத்தில் இருந்து சற்று மாறுபட்டு இலங்கை தமிழர் பிரச்சனையை இந்த பாகத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக, இந்த பாகத்தில் இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்துள்ளதாக பல அமைப்புகளிடம் இருந்து கண்டனங்கள் எழுந்தது. ஆனால், முதல் சீசனில் இருந்த அதே விறுவிறுப்பான திரைக்கதை, இரண்டாவது சீசனிலும் இருந்ததால் இதுவும் வெற்றி பெற்றது.
இந்த சூழலில், தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் மூன்றாவது சீசன் வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, நவம்பர் 21-ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இதன் மூன்றவது சீசன் வெளியாகிறது. ஏற்கனவே, இதன் ட்ரெயிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த முன்னோட்டத்தில், தனது பணி குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் ஸ்ரீகாந்த் திவாரி கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது மட்டுமின்றி, முந்தைய சீசன்களை போன்று ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றன.
அதன்படி, இந்த சீசனில் எந்த மாதிரியான கதைக்களத்துடன் தி ஃபேமிலி மேன் தொடர் பயணிக்கும் என்ற கேள்வி பார்வையாளர்கள் இடையே எழுந்துள்ளது. மேலும், இதில் ஸ்ரீகாந்த் திவாரி மற்றும் அவரது மனைவி இடையே இருக்கும் சிக்கல்கள் என்னவானது என்பதற்கான விடையும் இருக்கும் என்று கருதப்படுகிறது. பரபரப்புக்கு குறைவு இல்லாத வகையில் இந்த சீசனும் உருவாகி இருக்கும் என்று இதன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
agent Srikant Tiwari 𝚛̶𝚎̶𝚙̶𝚘̶𝚛̶𝚝̶𝚒̶𝚗̶𝚐̶ ̶𝚘̶𝚗̶ ̶𝚍̶𝚞̶𝚝̶𝚢̶ ̶ is on the run 👀#TheFamilyManOnPrime, New Season, November 21@rajndk @sumank @TussharSeyth @Sumitaroraa @BajpayeeManoj @JaideepAhlawat @NimratOfficial #Priyamani @sharibhashmi @ashleshaat… pic.twitter.com/BQQuPQWqC6
— prime video IN (@PrimeVideoIN) November 7, 2025
மேலும் படிக்க: Diesel OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
இதேபோன்ற கதைக்களத்துடன் எத்தனையோ திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அவற்றில் இருந்து மாறுபட்ட திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டதால், தி ஃபேமிலி மேன் இணையத் தொடருக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். மேலும், ஸ்பை த்ரில்லர் பாணியிலான கதையம்சம் என்றாலும், சண்டைக் காட்சிகள் தொடங்கி பல்வேறு வகைகளில் நம்பகத்தன்மையை இதில் உருவாக்கி உள்ளனர். இதுவும் தி ஃபேமிலி மேன் தொடரை பார்வையாளர்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தது.
அந்த வகையில், நாளை வெளியாகும் இதன் மூன்றாவது சீசனை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எனினும், முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த மூன்றாவது சீசனுக்கும் கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் நிலவி வருகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com