image

Jio Hotstar South Unbound: தென்னிந்திய அளவில் ஜியோ ஹாட்ஸ்டார் மாபெரும் திட்டம்; புதிய திரைப்படங்கள், சீரிஸ்களுக்காக ரூ. 4000 கோடி முதலீடு

Jio Hotstar: ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் சார்பில் தென்னிந்திய அளவில் பல்வேறு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் புதிதாக தயாரிக்கப்பட இருக்கின்றன. இதற்கான பிரம்மாண்டமான அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
Editorial
Updated:- 2025-12-10, 15:03 IST

முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஜியோ ஹாட்ஸ்டார், தென்னிந்திய அளவில் பல்வேறு புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தயாரிக்க இருக்கிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட அறிமுக நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரூ. 4000 கோடி முதலீடு செய்யும் ஜியோ ஹாட்ஸ்டார்:

 

தென்னிந்தியாவை பொறுத்த வரை ஓடிடி பயன்பாடு கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இருந்து ஓடிடி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல், தமிழில் இருந்து மாறுபட்ட கதையசம் கொண்ட படைப்புகள் அடிக்கடி ஓடிடியில் வெளியாகின்றன. இதன் காரணமாக, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

 

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு:

 

இந்த சூழலில், ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு சென்னையில் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

அதில், "சென்னையில் 'ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட்' (Jio Hotstar South Unbound) நிகழ்வை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலங்களவை உறுப்பினரும், கலைஞானியுமான திரு. கமல்ஹாசன் அவர்களுடனும், ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவன பிரதிநிதிகளுடனும் இணைந்து, தென் மாநிலங்களின் கலை மற்றும் படைப்பு பொருளாதாரத்தை (Creative Economy) வலுப்படுத்தும் நோக்கில் இந்த முன்னெடுப்பு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Kaantha OTT Release Date: ஓடிடியில் வெளியாகும் காந்தா திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

இளம் படைப்பாளர்களை கண்டறிந்து, அவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசுக்கும், ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

நான்கு தென் மாநிலங்களிலும் சேர்த்து ரூ.12,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்காக மட்டும் ரூ.4,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, இளம் படைப்பாளிகளுக்கு புதிய வாய்ப்புகளும் அமையும்.

 

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் முன்னெடுப்பு மாபெரும் வெற்றியடைய எனது வாழ்த்துகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த் 

 

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்கள்:

 

சென்னையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்றனர். குறிப்பாக, விஜய் சேதுபதி, மோகன்லால், நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமின்றி விரைவில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பணியாற்றிய கலைஞர்களும் இதில் பங்கேற்றனர்.

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள்:

 

அந்த வகையில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'காட்டான்', யோகிபாவுவின் 'கெனத்தை காணோம்', கதிர் நடிக்கும் 'லிங்கம்', சமீபத்தில் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'ஹார்ட் பீட்' சீரிஸின் மூன்றாவது சீசன், யூடியூபர் விஜய் குமாரின் 'ரிசார்ட்' உள்ளிட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் படைப்புகளின் அறிவிப்பும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.

நாளுக்கு நாள் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் பொழுதுபோக்கு துறையில் அதிகரித்து வரும் நிலையில், ஜியோ ஹாட்ஸ்டாரின் இந்த அடுத்தகட்ட நகர்வு பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, மற்ற ஓடிடி தளங்களிடம் இருந்து விரைவில் ஏதேனும் முக்கிய மாற்றங்கள் அல்லது திரைப்படம், வெப் சீர்ஸ் தொடர்பான அப்டேட் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com