image

Rukmini Vasanth Birthday: நடிகை ருக்மிணி வசந்தின் பிறந்த நாள் இன்று; அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் 5 திரைப்படங்கள்

Actress Rukmini Vasanth: நடிகை ருக்மிணி வசந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த 5 முக்கியமான திரைப்படங்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-12-10, 12:22 IST

பான் இந்தியன் ஹீரோயினாக கலக்கி கொண்டிருக்கும் ருக்மிணி வசந்த், இன்று (டிசம்பர் 10) தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் இவரது திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன.

நடிகை ருக்மிணி வசந்தின் பிறந்த நாள்:

 

ருக்மிணி வசந்த், கடந்த 1996-ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தார். இவரது தந்தையான வசந்த் வேணுகோபால், அசோக சக்கரம் விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பீர்பால் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் ருக்மிணி வசந்த அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ருக்மிணி வசந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் 5 திரைப்படங்கள் குறித்து இதில் காண்போம்.

 

பீர்பால்:

 

கன்னடத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பீர்பால். இப்படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்ட நிலையில், இப்படம் முதல் பாகமாக வெளியானது. எம்.ஜி. ஸ்ரீனிவாஸ் இயக்கி, நடித்த இந்த திரைப்படத்தின் மூலமாக தனது கலைப்பயணத்தை ருக்மிணி வசந்த் தொடங்கினார். ராஷமான் பாணியிலான திரைக்கதையில் உருவான இந்த திரைப்படத்திற்கு, விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. ராமதாஸ் என்பவரது கொலையை விசாரிக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், ருக்மிணி வசந்தின் அறிமுகம் பலரது கவனத்தை ஈர்த்தது.

மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த் 

 

சப்த சாகரதாச்சே எல்லோ:

 

பீர்பால் திரைப்படத்தின் மூலமாக ருக்மிணி வசந்த அறிமுகம் ஆகி இருந்தாலும், அவரது நடிப்பு 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற திரைப்படத்தின் மூலம் பரவலாக வரவேற்பை பெற்றது. கன்னடத்தில் வெளியான இந்த திரைப்படம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமா ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது. நாம் பார்த்து பழகிய காதல் கதையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் உருவாக்கி இருந்ததாக இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையே பாராட்டுகள் கிடைத்தது. இந்த திரைப்படத்தின் வாயிலாக பான் இந்தியன் ஹீரோயின் என்ற அந்தஸ்தை நடிகை ருக்மிணி வசந்த் அடைந்தார். இப்படம் அவரது நடிப்புக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது. குறிப்பாக, இரு பாகங்களாக இப்படம் வெளியானது.

Rukmini Vasanth

 

ஏஸ் (Ace):

 

ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆகி இருந்த ருக்மிணி வசந்த, கடந்த மே மாதம் 23-ஆம் தேதி வெளியான ஏஸ் (Ace) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படத்தில், முன்னணி நடிகரான விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ருக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். தனது தாயாரின் வீட்டை அவருடைய மறைவுக்கு பின்னர், அவரது இரண்டாவது கணவரிடம் இருந்து மீட்க போராடும் ஒரு உறுதியான பெண் கதாபாத்திரத்தில் ருக்மிணி வசந்த நடித்தார். இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், தமிழில் ருக்மிணி வசந்திற்கு நல்ல அறிமுகம் ஆக அமைந்தது.

மேலும் படிக்க: Actress Sunaina: நடிகை சுனைனாவின் காதலர் இவர் தானா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு 

 

மதராஸி:

 

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்தார். இப்படம் முழுவதும் அவரது கதாபாத்திரத்தை சுற்றிலும் அரங்கேறுவதை போன்று அமைந்தது. மாலதி என்ற கதாபாத்திரத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட நபரை காதலிக்கும் ஒரு பெண்ணாக இதில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, இதில் இடம்பெற்ற தங்கப்பூவே பாடல் பலருக்கு விருப்பமானதாக அமைந்தது.

Actress Rukmini Vasanth

 

காந்தாரா: சாப்டர் 1

 

சமீபத்தில் இவரது நடிப்பில் பான் இந்தியன் திரைப்படமாக வெளியான காந்தாரா: சாப்டர் 1, உலக அளவில் சுமார் ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். ஏற்கனவே, காந்தாரா படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் முன்கதையாக இப்படம் உருவாகி இருந்தது. இதில் பழங்குடியின மக்களின் கடவுள் வழிபாடு குறித்து காட்சிப்படுத்தி இருந்தனர். இப்படத்தின் மூலமாக இந்திய அளவில் பலரது கவனத்தை ருக்மிணி வசந்த் ஈர்த்தார்.

 

இதைத் தொடர்ந்து, பல திரைப்படங்களில் ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Instagram

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com