
Tamil OTT release this week (October 27 - October 31): இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களான லோகா: சாப்டர் 1 மற்றும் இட்லி கடை ஆகிய திரைப்படங்களின் ஓடிடி வெளியீடு தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான போது பார்வையாளர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற திரைப்படங்களில் லோகா: சாப்டர் 1 மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டும் முக்கியமான திரைப்படங்கள் ஆகும்.
குறிப்பாக, லோகா: சாப்டர் 1 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக பலரும் காத்திருந்தனர். மலையாளத்தில் வெளியான திரைப்படங்களிலேயே முதன்முறையாக ரூ. 300 கோடி வசூலித்து சாதனை படைத்த திரைப்படம் என்ற பெருமையை லோகா: சாப்டர் 1 பெற்றுள்ளது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றது. கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான இப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்தார். கேரள புராண கதைகளை அடிப்படையாக கொண்டு சூப்பர் ஹீரோ பாணியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தை டொமினிக் அருண் இயக்கினார்.
The world of Lokah unfolds exclusively on JioHotstar, streaming from October 31st.@DQsWayfarerFilm @dulQuer @kalyanipriyan @naslen__ @NimishRavi @SanthyBee#LokahOnJioHotstar #LokahUniverse #YakshiReturns #LokahChapter1 #Wayfarerfilms #DulquerSalmaan #DominicArun… pic.twitter.com/Va3c6PGttC
— JioHotstar Malayalam (@JioHotstarMal) October 24, 2025
கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி ஓணம் பண்டிகையின் போது திரையரங்குகளில் வெளியான இப்படம், எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அண்மையில், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளம், இப்படத்திற்கான ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாகவும், விரைவில் இப்படம் ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 31-ஆம் தேதி இப்படம் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மலையாளம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளிலும் லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
மேலும் படிக்க: திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினாரா நடிகை அபிராமி? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு
இதேபோல், இந்த ஆண்டு தமிழில் வெளியான திரைப்படங்களில் இட்லி கடை திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் இயக்கிய இப்படத்தில் ராஜ் கிரண், சத்யராஜ், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
Anbaala thodanguna idli kadai anbaala dhaan mudiyum 🥰♨️ pic.twitter.com/2jLoyFFNrP
— Netflix India South (@Netflix_INSouth) October 24, 2025
கிராமிய பின்னணியில் ஃபீல் குட் டிராமா வகையில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், மண்ணின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக இருந்தது என்று பல விமர்சகர்கள் கூறினர். அந்த வகையில், சமீபத்திய தமிழ் திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட கதைக்களத்தில் இப்படம் அமைந்ததாக கூறப்பட்டது. இந்த சூழலில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 29-ஆம் தேதி இட்லி கடை திரைப்படம் வெளியாகிறது. இப்படமும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
அதன்படி, இந்த இரண்டு திரைப்படங்களையும் ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com