image

Friday OTT Releases (December 12): காந்தா முதல் ஆரோமலே வரை; இந்த வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட்

OTT Releases This Week: இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் முக்கியமான தமிழ் திரைப்படங்கள் என்னவென்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். வார இறுதி நாட்களில் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த திரைப்படங்கள் வெளியாகின்றன.
Editorial
Updated:- 2025-12-11, 13:48 IST

Tamil Movies in OTT: நாளைய தினம் ஓடிடியில் சில தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன. இவற்றில் சில படங்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கில் வெளியாகின. அந்த வகையில், இவற்றின் ஓடிடி வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி, வெள்ளிக்கிழமையை முன்னிட்டி ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் குறித்து இதில் காணலாம்.

வெள்ளிக்கிழமை ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்:

 

பெரும்பாலும் திரையரங்கில் படங்களை காண வேண்டும் என்று நிறைய பேர் விரும்புவார்கள். இதன் காரணமாக சில பழைய திரைப்படங்கள் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. இவற்றில் சில திரைப்படங்கள் வசூல் ரீதியாக வரவேற்பையும் பெறுகின்றன. ஆனால், தற்போதைய சூழலில் திரையரங்கில் படங்கள் வெளியாவதற்கு காத்திருப்பதை போன்று, ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளிக்கிழமையில் நிறைய படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன.

 

காந்தா ஓடிடி வெளியீடு:

 

அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே காந்தா திரைப்படம் நாளைய தினம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பீரியட் த்ரில்லர் டிராமா வகையில் இப்படத்தின் கதை அமைந்திருந்தது. முன்னணி நடிகர்களான துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டக்குபட்டி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். ஏற்கனவே, துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான லோகா திரைப்படம், சுமார் ரூ. 300 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் படிக்க: Jio Hotstar South Unbound: தென்னிந்திய அளவில் ஜியோ ஹாட்ஸ்டார் மாபெரும் திட்டம்; புதிய திரைப்படங்கள், சீரிஸ்களுக்காக ரூ. 4000 கோடி முதலீடு

 

இதனால் காந்தா திரைப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், திரையரங்கில் வெளியான போது இப்படத்திற்கு படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், இப்படத்தை ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி, நாளைய தினம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

 

ஆரோமலே ஓடிடி வெளியீடு:

 

சண்டைக் காட்சிகள், வன்முறை இல்லாமல் ஃபீல் குட் காமெடி திரைப்படம் காண வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, ஆரோமலே திரைப்படம் சரியான தேர்வாக இருக்கும். அறிமுக இயக்குநர் சாரங் தியாகு இயக்கிய இப்படத்தில் கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவத்மிகா ராஜசேகர் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது.

மேலும் படிக்க: Padayappa Re-Release: படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க ஐஸ்வர்யா ராயை முதலில் அணுகினோம்; சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த ரஜினிகாந்த்

 

குறிப்பாக, ஹர்ஷத் கான் மற்றும் கிஷன் தாஸ் காம்போவில் காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படி இருந்ததாக பலர் கூறினர். இதனால், இப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். அதனடிப்படையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை, ஆரோமலே திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் பார்க்கலாம்.

 

தீயவர் குலை நடுங்க ஓடிடி வெளியீடு:

 

இவை தவிர அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம், தீயவர் குலை நடுங்க. இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்கி இருந்தார். எழுத்தாளர் ஒருவரது கொலை வழக்கை போலீஸ் அதிகாரி விசாரிப்பதில் இருந்து தொடங்கும் இப்படம், அதற்கான காரணம் மற்றும் கொலையாளி யார் என்பதை விவரிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில் சன் நெக்ஸ்ட் (Sunnxt) ஓடிடி தளத்தில் நாளைய தினம் தமிழில் இப்படம் வெளியாகிறது. ஓடிடி வெளியீட்டின் போது இப்படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

இப்படி வெவ்வேறு பாணியிலான தமிழ் திரைப்படங்கள் நாளை ஓடிடி தளத்தில் வெளியாவதால், இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com