
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சுனைனா, சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக இருக்கிறது.
நடிகை சுனைனா கடந்த 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாக்பூரில் பிறந்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர், இவரது பெற்றோர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்ததால், அங்கேயே சுனைனா வளர்ந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான குமாரி Vs குமாரி தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது கலைப்பயணத்தை சுனைனா தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சுனைனா அறிமுகம் ஆனார். இப்படம் அவரை பெரும்பாலான ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. மேலும், 2010-ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படம், இவரது திரைப்பயணத்தில் முக்கிய இடத்தை பிடித்தது. இது மட்டுமின்றி கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான நீர்ப்பறவை திரைப்படத்தில் சுனைனாவின் நடிப்பு பலரது பாராட்டுகளையும் பெற்றது.
மேலும் படிக்க: Samantha: இயக்குநர் ராஜ் நிடிமோருவை கரம் பிடித்த நடிகை சமந்தா; முழு விவரம் இதோ
திரைப்படங்கள் மட்டுமின்றி ஓடிடியில் வெளியான வெப் சீரிஸ்களிலும் (இணையத் தொடர்) சுனைனா கவனம் ஈர்த்தார். இவரது நடிப்பில் வெளியான நிலா நிலா ஓடி வா, இன்ஸ்பெக்டர் ரிஷி ஆகிய வெப்சீரிஸ்கள் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக அமைந்தன. மேலும், சில்லு கருப்பட்டி அந்தாலஜியில் சுனைனாவின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவை மட்டுமின்றி தெறி, கவலை வேண்டாம், சமர் ஆகிய படங்களில் கேமியோ ரோலில் சுனைனா தோன்றி இருக்கிறார். சமீபத்தில் வெளியான குபேரா திரைப்படத்தில் நாகார்ஜுனாவின் மனைவியாக சுனைனா நடித்திருந்தார்.
மேலும் படிக்க: Nivetha pethuraj: காதலரை அறிமுகப்படுத்திய நடிகை நிவேதா பெத்துராஜ்; வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஆச்சரியம்!
இதனிடையே, நடிகை சுனைனா ஒரு நபரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சுனைனாவின் காதலர் யார் என்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐக்கிய அமீரக எமிரேட்ஸை சேர்ந்த சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான காலித் அல் அமேரியை சுனைனா காதலித்து வருவதாக தெரிகிறது. ஏனெனில், தனது பிறந்தநாளை நேற்றைய தினம் கொண்டாடிய காலித் அல் அமேரி, நடிகை சுனைனாவுடன் தாம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இந்த இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக இருவரும் காதலித்து வருவதாக தமிழ் சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, காலித் அல் அமேரியின் பிறந்தநாள் கேக்கை, நடிகை சுனைனா ஆர்டர் செய்ததாகவும் சமூக ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவை நடிகை சுனைனா லைக் செய்துள்ளார். அந்த வகையில், இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது சினிமாவை சேர்ந்தவர்களிடையே பேசுபொருளாக உள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: instagram
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com