
New Tamil OTT releases: திரையரங்கிற்கு சென்று திரைப்படங்களை பார்த்து மகிழ்வது போன்று ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாகும் போது அவற்றை காண பலரும் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில், விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் சில தமிழ் திரைப்படங்களின் தொகுப்பை இக்குறிப்பில் பார்க்கலாம். இவற்றை எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம் என்பது குறித்த விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Don't forget.. His name is Kittu 🔥#ShakthiThirumagan streaming Oct 24 only on JioHotstar 💥#ShakthiThirumagan streaming from Oct 24 only on JioHotstar#ShakthiThirumaganOnJioHotstar #ShakthiThirumaganStreamingFromOct24 #JioHotstar #JioHotStarTamil @vijayantony… pic.twitter.com/PKpCndPKbA
— JioHotstar Tamil (@JioHotstartam) October 22, 2025
மேலும் படிக்க: Lokah OTT release: வசூல் சாதனை படைத்து பெரும் வரவேற்பை பெற்ற லோகா திரைப்படம்; எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் சக்தி திருமுருகன். இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு, விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக பலரும் காத்திருந்தனர். இந்நிலையில், அக்டோபர் 24-ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சக்தி திருமகன் திரைப்படம் வெளியாகிறது.
When greed traps, no one escapes.#Blackmail, streaming on Simply South from October 30 worldwide, excluding India. pic.twitter.com/PjvwvjikH4
— Simply South (@SimplySouthApp) October 18, 2025
Jumbo Circus (Kannada) - A romantic journey full of charm, streaming from October 24th!
— SUN NXT (@sunnxt) October 17, 2025
Blackmail (Tamil) - A gripping crime thriller with twists at every turn, streaming from October 30th!
Two languages, two genres, endless entertainment—on SunNXT!#UpcomingOnSunNXT… pic.twitter.com/Bf3sm4Xcz7
மேலும் படிக்க: They call him OG OTT release: ஓடிடியில் வெளியாகும் பவன் கல்யாணின் 'ஓஜி' திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்? முழு விவரம் இதோ
மாறன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், தேஜூ அஷ்வினி, பிந்து மாதவி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பிளாக்மெயில் (Blackmail). ஜே.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம், கடந்த செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரைம் த்ரில்லர் பாணியிலான இப்படம், அக்டோபர் 30-ஆம் தேதி சிம்ப்லி சௌத் (Simply south) ஓடிடி தளத்தில் இந்தியாவை தவிர பிற நாடுகளில் வெளியாகிறது. அதே தேதியில், சன் நெக்ஸ்ட் (Sunnxt) ஓடிடி தளத்தில் தமிழில் இப்படம் வெளியாக இருக்கிறது.
⚖️ Every sin leaves a scar… and every scar tells a story.
— Tentkotta (@Tentkotta) October 23, 2025
💥 #Accused — a powerful tale of guilt, truth & redemption. Streaming Oct 24 on @Tentkotta 🎬🔥
👉 Subscribe now: https://t.co/zz0ZAaNTUa
✅ Go legal. Say no to piracy!@actor_ajmal @iYogiBabu #NPanneerSelvam… pic.twitter.com/VH9eSJ03C0
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில், உதயா, யோகிபாபு, அஜ்மல் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் அக்யூஸ்ட் (Accused). விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் இப்படத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், டென்ட்கொட்டா (Tentkotta) ஓடிடி தளத்தில் அக்டோபர் 24-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. திரையரங்கில் இப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், ஓடிடி வெளியீட்டின் போது வரவேற்பை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com