
Revolver Rita: அண்மையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரிவால்வர் ரீட்டா திரைப்படம், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஓடிடியில் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. இந்த திரைப்படத்தை ஜே.கே. சந்துரு இயக்கி இருந்தார். ஃபேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரித்த இந்த திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த திரைப்படம், டிசம்பர் 26-ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது.
கதாநாயகியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராதிகா சரத்குமார், சுனில். ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன், அஜய் கோஷ், ஜான் விஜய் மற்றும் கல்யாண் மாஸ்டர் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
மேலும் படிக்க: Karuppu Movie Update: கருப்பு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பிரபல சேனல்; சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி
கதையின் நாயகியான ரீட்டா (கீர்த்தி சுரேஷ்), தனது தாயார் (ராதிகா சரத்குமார்) மற்றும் சகோதரிகளுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் இவரது வீட்டிற்குள் எதிர்பாராத விதமாக ரௌடி நுழைவதால் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் விளைவுகளையும் டார்க் காமெடி வகையில் இப்படம் பதிவு செய்திருந்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான போது எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால், இப்படத்தின் ஓடிடி வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் காத்திருந்தனர்.

சினிமாவில் கதாநாயகிகளை மையமாக கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்படுவது அரிதான நிகழ்வு. அவ்வாறு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டாலும், அவை கமர்ஷியல் பாணியில் இருக்காது என்று பலர் கருதுகின்றனர். இந்த சூழலில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான லோகா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக, மலையாளத்தில் வெளியான திரைப்படங்களிலேயே ரூ. 300 கோடி வரை வசூலித்த திரைப்படமாக லோகா அமைந்தது என்று கூறப்படுகிறது. இதன் வெற்றியை தொடர்ந்து, லோகா திரைப்படத்தின் அடுத்த பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
Apdi handbag la weapons irukura alavuku avanga yaaru? 🔫😱 pic.twitter.com/gD2dXvQxcx
— Netflix India South (@Netflix_INSouth) December 21, 2025
மேலும் படிக்க: Year Ender 2025: இந்த ஆண்டில் வசூல் சாதனை படைத்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ!
இதனால், கீர்த்தி சுரேஷும் கதாநாயகியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. முன்னதாக, நடிகையர் திலகம் என்ற திரைப்படத்திலும், நாயகியை முதன்மையாக கொண்டு உருவாக்கப்பட்ட பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். இதில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பலரது பாராட்டுகளை பெற்றதுடன், அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனால், ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் மீது ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இந்நிலையில், திரையரங்கில் இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும், ஓடிடியில் இப்படத்தை காணலாம் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். அதன்படி, இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில், திரையரங்கை போன்று இல்லாமல், ஓடிடியில் இப்படத்திற்கு வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்கள் இடையே எழுந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com