
Top 5 Tamil Movies 2025: நடப்பு ஆண்டில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக அளவில் வசூலித்த டாப் 5 திரைப்படங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். அந்த வகையில், sacnilk.com என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த தமிழ் திரைப்படங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி, சில சிறிய பட்ஜெட் திரைப்படங்களும் மக்கள் ஆதரவை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளன. குறிப்பாக, இதில் ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு பாணியிலான கதையம்சம் கொண்டவை. இவை திரையரங்கில் வெளியான போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 2025-ல் அதிகம் வசூலித்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள் என்னவென்று காணலாம்.
இந்த வரிசையில் கூலி திரைப்படம் முதலிடத்தை பெறுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படம் ஏறத்தாழ ரூ. 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஆமிர் கான் என பெரும் நட்சத்திர பட்டாளம் இடம்பெற்றிருந்தது. திரையரங்கில் இப்படம் வெளியான போது கலவையான விமர்சனத்தை பெற்றது. எனினும், இப்படம் சுமார் ரூ. 500 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Parasakthi Movie: 'பராசக்தி படத்தில் மட்டும் தான் ரவி மோகன் வில்லன்; எனக்கு அவர் தான் ஹீரோ': சிவகார்த்திகேயன் புகழாரம்
இதேபோல், இந்த ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித்குமார் நடிப்பில் வெளியான இப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். முற்றிலுமாக அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கும், கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால், இந்த திரைப்படம் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது என்று தகவல்கள் வெளியாகின.
AK sir’s MAGIC💥💥💥💥💥💥💥💥💥💥💥Love you my sir, Forever grateful sir❤️❤️❤️❤️🙏🏻🙏🏻 @MythriOfficial @SureshChandraa sir #GoodBadUglyBlockbuster ❤️💥🔥💥❤️🙏🏻 pic.twitter.com/wGM5AClBVt
— Adhik Ravichandran (@Adhikravi) April 18, 2025
நடப்பு ஆண்டில் வெளியான திரைப்படங்களில் டிராகன் படத்திற்கு பார்வையாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இந்த திரைப்படம், விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்றது. முன்னதாக, பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தை போல, அவரது இந்த திரைப்படமும் சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால், இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த படங்களின் பட்டியலில் டிராகன் திரைப்படம் இணைந்தது.
அடுத்தபடியாக, அஜித்குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் சார்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் இடம்பெறுகிறது. அஜித்குமாரின் மாறுபட்ட நடிப்பில் உருவான இந்த திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அனிருத்தின் இசையில் விடாமுயற்சி டைட்டில் டிராக் பலரது விருப்பமான பாடலாக அமைந்தது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ஏறத்தாழ ரூ. 135 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
VIDAAMUYARCHI is setting the screens on fire! 🔥 Witness the grit, determination, and unstoppable action! 🤩
— Lyca Productions (@LycaProductions) February 11, 2025
VIDAAMUYARCHI TRIUMPHS 📽️✨#Vidaamuyarchi #Pattudala #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers… pic.twitter.com/8EufCaSmrO
இந்த ஆண்டு வெளியான மற்றுமொரு வெற்றிப்படமாக ட்யூட் திரைப்படம் அமைந்தது. கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படமும் சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதன் மூலம் ரூ. 100 கோடி வசூலில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற நடிகராக பிரதீப் ரங்கநாதன் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும், இப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இவை மட்டுமின்றி குடும்பஸ்தன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படங்கள் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் லாபத்தை ஈட்டின. அந்த வகையில், நடப்பு ஆண்டில் பலதரப்பட்ட திரைப்படங்கள் தமிழில் வெளியாகி வரவேற்பை பெற்றன.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com