
Aaryan OTT Release Date: விஷ்ணு விஷால், ஷ்ரதா ஸ்ரீநாத், செல்வராகவன் ஆகியோர் நடிப்பில், பிரவீன். கே இயக்கத்தில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி ஆர்யன் திரைப்படம், திரையரங்குகளில் வெளியானது. எனினும், இந்த திரைப்படம் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டே தகவல்கள் வெளியாகின. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, ஆர்யன் என்ற க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படது.

இப்படத்தின் இயக்குநர் பிரவீன். கே முன்னதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றினார். மேலும், விஷ்ணு விஷால் நடிப்பில், மனு ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தில், எழுத்துப் பணிகளையும் பிரவீன். கே மேற்கொண்டார். அந்த வகையில், அவரது ஆர்யன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால், இப்படத்தை தனது நிறுவனம் சார்பில் தயாரித்தார்.
மேலும் படிக்க: Arasan: வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் திரைப்படத்தில் இணைந்த விஜய் சேதுபதி; சர்ப்ரைஸ் கொடுத்த கலைப்புலி தாணு
இப்படத்தில் எழுத்தாளர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த செல்வராகவன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நபரை கொலை செய்து விட்டு, அடுத்தடுத்து 5 கொலைகளை தாம் செய்ய இருப்பதாக கூறி விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே மிகுந்த அதிர்ச்சியும், குழப்பமும் நிலவுகிறது. இத்தகைய சூழலில், இந்த வழக்கை போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் கையில் எடுக்கிறார். கொலையாளி சொன்னது போல் கொலைகள் நடந்ததா? அதனை விஷ்ணு விஷால் தடுத்தாரா? என்பதற்கான கேள்விகளுக்கு திரைக்கதை விடை சொல்வது போன்று இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே, ராட்சசன் என்ற க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நடித்திருந்தார். சைக்கோ கொலையாளியை போலீசார் எவ்வாறு கண்டறிந்தனர் என்பது குறித்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, விஷ்ணு விஷாலிடம் இருந்து மற்றொரு க்ரைம் த்ரில்லர் திரைப்படம் உருவானதால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், ஆர்யன் திரைப்படத்தை ராட்சசன் படத்துடன் ஒப்பிட வேண்டாம் என விஷ்ணு விஷால் கூறி இருந்தார்.
மேலும் படிக்க: Dhurandhar: ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் தெய்வத்திருமகள் சாரா; வயது வித்தியாசம் தொடர்பாக கேள்வி எழுப்பும் விமர்சகர்கள்
இந்த சூழலில், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி ஆர்யன் திரைப்படம் வெளியானது. எனினும், இந்த திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. படத்தின் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பு இறுதி வரை நீடிக்கவில்லை என்று விமர்சனம் முன்வக்கப்பட்டது. ஆனால், இந்த திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
Oru writer oda next masterpiece oru crime ah irundha? 😮🚨 pic.twitter.com/kfaKVLGTGi
— Netflix India South (@Netflix_INSouth) November 22, 2025
ஆர்யன் ஓடிடி வெளியீடு:
அதன்படி, நவம்பர் 28-ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆர்யன் திரைப்படம் வெளியாகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. திரையரங்குகளில் ஆர்யன் திரைப்படம் வெளியான போது எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், ஓடிடி வெளியீட்டின் போது இதற்கு வரவேற்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com