herzindagi
image

Kuttram Purindhavan OTT Release Date: பசுபதி, விதார்த் நடிப்பில் உருவான குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்; எந்த ஓடிடி தளத்தில், எப்போது பார்க்கலாம்?

Kuttram Purindhavan OTT Release: குற்றம் புரிந்தவன் இணையத் தொடர் எப்போது வெளியாகிறது என்பது குறித்த முழு விவரங்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. இதனை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
Editorial
Updated:- 2025-12-02, 13:39 IST

Kuttram Purindhavan Web Series: குற்றம் புரிந்தவன் என்ற தமிழ் வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸ் மாறுபட்ட கோணத்தில் உருவாகி இருக்கும் என கோலிவுட் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

குற்றம் புரிந்தவன் தமிழ் வெப் சீரிஸ் ஓடிடி வெளியீட்டு தேதி:

 

திரைப்படங்கள் போலவே வெப் சீரிஸ்களும் (இணையத் தொடர்கள்) மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மற்ற மொழிகளில் இருந்து வெளியான வெப் சீர்ஸ்களுக்கு ரசிகர்கள் இடையே கிடைத்த வரவேற்பை கருத்திற்கொண்டு தமிழிலும் சில வெப் சீரிஸ்கள் எடுக்கப்பட்டன. அந்த வகையில், தமிழ் வெப் சீரிஸ் பட்டியலில் சமீபத்திய வரவாக குற்றம் புரிந்தவன் என்ற சீரிஸ் இணைய இருக்கிறது. டிசம்பர் 5-ஆம் தேதி முதல் இதனை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குற்றம் புரிந்தவன் ஓடிடி வெளியீடு: எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

குறிப்பாக, சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இதனை பார்க்கலாம். 8 எபிசோடுகளாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சீரிஸ், த்ரில்லர் பாணி மட்டுமின்றி மனிதர்களின் உணர்வுகளையும் நுட்பமாக காட்சிப்படுத்தி இருப்பதை போன்று இதன் சமீபத்திய ட்ரெய்லர் அமைந்துள்ளது.

Kuttram Purindhavan

மேலும் படிக்க: Stephen OTT Release Date: நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தமிழ் திரைப்படம் 'ஸ்டீஃபன்' ; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸின் கதைச்சுருக்கம்:

 

மெர்சி என்ற சிறுமி காணாமல் போனதில் இருந்து அதனை சுற்றி நிகழும் நிகழ்வுகளில் இந்த வெப் சீரிஸ் பயணிக்கும் வகையில் இதன் ட்ரெய்லரில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இது மட்டுமின்றி, இதில் நடித்துள்ள கதாபாத்திரங்களுக்கும் சில கிளைக் கதைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இதன் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதில் இருந்து, இந்த வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Web Series

 

குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் நடிகர்கள் பட்டியல்:

 

செல்வமணி முனியப்பன் இயக்கி இருக்கும் இந்த வெப் சீரிஸில், பசுபதி, விதார்த், லிஸ்ஸி ஆண்டனி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நடிகர்கள் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால், இந்த வெப் சீரிஸின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு அதிகரித்தது. சமீபத்தில் பசுபதி நடிப்பில் வெளியான பைசன் திரைப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, அவரிடம் இருந்து அடுத்தபடியாக வெளியாகும் தொடராக குற்றம் புரிந்தவன் அமைந்துள்ளது.

மேலும் படிக்க: Dies Irae OTT Release Date: விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற 'டைஸ் ஐரே' திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

 

ரசிகர்களின் ஆதரவை பெறும் வெப் சீரிஸ்கள்:

 

இன்றைய காலகட்டத்தில் பல மொழிகளில் இருந்து வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை பார்க்கும் வாய்ப்பு பலருக்கு இருக்கிறது. இதனால், எல்லோரின் ரசனையும் அதிகரித்துள்ளது. அதன்படி, புதுமையான கதைக்களத்துடன் கூடிய படைப்புகள் தமிழிலும் வெளியாக வேண்டும் என்றும் கோலிவுட் ரசிகர்கள் விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார் போல், தற்போது சில படைப்புகள் வெளியாகின்றன. இதனால், ஓடிடியில் நேரடியாக தமிழில் இருந்து பல திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் உருவாகின்றன.

 

இந்நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com