
Stephen Movie OTT Release: தற்போதைய சூழலில் திரையரங்குகளில் படங்கள் வெளியாவதை விட ஓடிடி வெளியீட்டுக்காக காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ஒரு தமிழ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழில் சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி மக்கள் ஆதரவை பெற்றன. இதேபோல், சில திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி இருந்தாலும், அவை எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. எனினும், ஓடிடி தளங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், ஸ்டீஃபன் என்ற தமிழ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்கு பின்னர், ஒரு தமிழ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவதால் இதன் மீது ரசிகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.
அதன்படி, ஸ்டீஃபன் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி முதல் பார்க்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. இதனால், மற்ற மொழி சினிமா ரசிகர்களும் ஸ்டீஃபன் திரைப்படத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கண்டு மகிழலாம். இதனால், இப்படத்தை காண பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: Dies Irae OTT Release Date: விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற 'டைஸ் ஐரே' திரைப்படம்; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?
இந்த சூழலில், ஸ்டீஃபன் திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் இருந்து இப்படம் சீரியல் கில்லர் பாணியில் இருக்கும் என்று தெரிகிறது. இதன் முன்னோட்டத்தில், 9 பெண்கள் காணாமல் போனதாக எழுந்த பிரச்சனையில் இருந்து திரைப்படம் தொடங்கும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவங்களுக்கு காரணமான ஸ்டீஃபன் என்ற நபர் போலீசாரிடம் சரண் அடைந்த நிலையில், அதன் பின்னர் நிகழும் சம்பவங்கள் வாயிலாக இப்படம் பயணிப்பதை போன்று இதன் ட்ரெய்லர் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால், கிரைம் த்ரில்லர் பாணி சினிமாவை விரும்பும் ரசிகர்களை ஸ்டீஃபன் திரைப்படம் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்டீஃபன் திரைப்படத்தில் கோமதி சங்கர், மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட், வடிவேல், விஜயஸ்ரீ மற்றும் ஷ்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை மிதுன் இயக்கியுள்ளார். தமிழில் ஏற்கனவே சீரியல் கில்லர் தொடர்பான திரைப்படங்கள் ஏராளமாக வெளியாகி இருப்பதால், மற்ற திரைப்படங்களில் இருந்து இப்படம் எவ்வாறு மாறுபட்டு இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Stephen oru deadly serial killer, aana avan yen surrender aaganum?👀🔪 pic.twitter.com/vRI5I6lzec
— Netflix India South (@Netflix_INSouth) November 26, 2025
திரையரங்கில் வெளியாகும் படங்களுக்கு செலவிடப்படும் தொகையை போலவே, ஓடிடிக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்படும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு அதிகமாக பணம் செலவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஓடிடியின் சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதை நாம் புரிந்து கொள்ளலாம். தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதியும், சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் தொடரின் மூன்றாவது சீசனில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார். முன்னதாக, ஃபார்சி என்ற தொடரிலும், அவர் முக்கிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஸ்டீஃபன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு என்ன மாதிரியாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Twitter
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com