மாலை நேரத்தில் சீக்கிரமாக ஸ்நாக்ஸ் செய்யணுமா? ரவா வாழைப்பழ லட்டு ட்ரை பண்ணுங்க

குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள ஸ்நாக்ஸ் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது ரவை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் ரவா வாழைப்பழ லட்டு ட்ரை பண்ணுங்க.
image

பள்ளி மற்றும் கல்லூரி சென்று வரக்கூடிய ஒவ்வொரு குழந்தைகளும் வீட்டிற்கு வந்தவுடன் என்ன ஸ்நாக்ஸ் இருக்கிறது? என்று தான் தேடுவார்கள். சேவு, சீவல்,பிஸ்கெட் போன்ற பல திண்பண்டங்கள் இருந்தாலும் சில நேரங்களில் அதை சாப்பிடுவதற்கு விரும்ப மாட்டார்கள். இந்த சூழலில் குழந்தைகளுக்கு சீக்கிரமாகவும், ஊட்டச்சத்துள்ளதாகவும் ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் கொஞ்சம் ரவா வாழைப்பழ லட்டு செய்துப் பாருங்கள். இதுவரை அந்த ரெசிபியை செய்தது இல்லையென்றால் இதோ உங்களுக்கு எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த சமையல் டிப்ஸ்களை இங்கே பகிர்கிறோம்.

சுவையான ரவை வாழைப்பழ லட்டு:

அரிசி மாவு புட்டு, கொழுக்கட்டை, கேப்பை ரொட்டி, பணியாரம் போன்ற ரெசிபிகள் செய்துக் கொடுத்து மிகவும் சளிப்பாகிவிட்டதா? ஒரு கப் ரவை மற்றும் ஒரு வாழைப்பழத்தை வைத்து சுவையான லட்டு செய்யுங்கள். இதற்கு தேவைப்படக்கூடிய பொருட்கள் இங்கே.

  • ரவை - ஒரு கப்
  • பழுத்த வாழைப்பழம் - 1
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு
  • நெய்- 2 தேக்கரண்டி
  • பால் - ஒன்றரை கப்
  • நாட்டு சரக்கரை அல்லது மண்டவெல்லம் - ஒரு கப்

மேலும் படிக்க:முந்திரி, பாதாம் போதும்.. வீட்டிலேயே சுவையான ஐஸ்கிரீம் ரெடி; ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

ரவை வாழைப்பழ லட்டு செய்முறை:

  • முதலில் ஒரு பெரிய பழுத்த வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • இதை ஒரு பவுலில் போட்டு நன்கு மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு நன்கு வதக்கிய பிறகு கொஞ்சமாக ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  • இதனுடன் ஒரு கப் ரவை சேர்த்து கலந்துக் கொள்ளவும். ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு ஒன்றரை கப் பால் சேர்த்து கெட்டியாகி வரும் வரை நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:குழந்தைகள் விரும்பும் கப் கேக்; வீட்டிலேயே சுலபமாக செய்முறை இதோ..

  • இதையடுத்து இந்த கலவையுடன் 1 கப் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • உருண்டையாக பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். சூடு ஆறியதும் சிறு சிறு லட்டு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சேர்த்து உருட்டி வைத்துள்ள சிறிய லட்டு உருண்டைகளைப் போட்டு கொஞ்ச நேரத்திற்கு ப்ரை செய்து எடுத்தால் போதும். சுவையாக மற்றும் ஆரோக்கியமான லட்டு ரெடி.

மேலும் படிக்க:ஆடி ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி பாயாசம்; சுவையான ஈஸி ரெசிபி இதோ

சாக்லேட், கேக், பிஸ்கெட் போன்ற ஸ்நாக்ஸ்கள் சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்கு நிச்சயம் ஊட்டச்சத்துள்ள இந்த ரவா வாழைப்பழ லட்டு ரொம்ப உதவியாக இருக்கும்.

Image credit - Pinterest

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP