உப்புக்கண்டம் போடுவது எப்படி தெரியுமா ? வாய்க்கு ருசியான குழம்பு செய்யலாம்

உப்புக் கண்டம் போட்டு வைத்துக் கொண்டால் தேவையான நேரங்களில் எடுத்து ருசியான குழம்பு தயாரிக்கலாம். ஆட்டுக்கறி கொண்டு உப்புக் கண்டம் போடுவது எப்படி என பார்ப்போம்.
image

உப்புக்கண்டம் இந்த வார்த்தையை பல இடங்களில் மிரட்டல் தொனியில் கேட்டு இருப்போம். தோல் உரித்து உப்புக் கண்டம் போட்டு விடுவேன் என்பார்கள். சுப நிகழ்வுகளில், விருந்துகளில் மீதமாகும் ஆட்டுக்கறியை கொண்டு உப்புக்கண்டம் போடுவார்கள். இந்த உப்புக்கண்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒரு முறை உப்புக்கண்டம் போட்டு வைத்தால் 2-3 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் பயன்படுத்தலாம். உப்புக்கண்டம் போடுவது மிகவும் எளிது. உப்புக்கண்டம் இருந்தால் தேவையான போது வறுத்து சாப்பிடலாம் அல்லது ருசியான உப்புக்கண்டம் குழம்பும் தயாரிக்கலாம்.

உப்புக்கண்டம் செய்ய தேவையானவை

  • ஆட்டுக்கறி
  • உப்பு
  • மஞ்சள் தூள்

உப்புக்கண்டம் செய்முறை

  • 4 கிலோ ஆட்டுக்கறி எலும்பு இல்லாமல் வாங்கிக் கொள்ளலாம். ஆட்டுக்கறி கொஞ்சம் கொழுப்புடன் இருந்தால் பரவாயில்லை.
  • பெரிய பெரிய துண்டுகளாக இருந்தாலும் வெயிலில் காயவைத்த பிறகு சுருங்கிவிடும்.
  • ஆட்டுக்கறியை தண்ணீரில் இரண்டு - மூன்று முறை நன்கு கழுவவும். இப்போது ஆட்டுக்கறியுடன் தலா மூன்று ஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கைகளால் நன்கு கலந்துவிடவும்.
  • இதை ஊசியில் கோர்த்து துணி காய வைப்பது போல் வெயிலில் ஒரு வாரத்திற்கு காயவிட்டு எடுங்கள்.

உப்புக்கண்டம் குழம்பு செய்ய தேவையானவை

  • உப்புக்கண்டம்
  • வெங்காயம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • மஞ்சள் தூள்
  • தனியா தூள்
  • கரம் மசாலா
  • தண்ணீர்
  • கறிவேப்பிலை

மேலும் படிங்கமண்சட்டியில் நெத்திலி மீன் குழம்பு செய்முறை; வாசனை மூக்கை துளைக்கும்

உப்புக்கண்டம் செய்முறை

  • 250 கிராம் உப்புக்கண்டம் எடுத்து சுடு தண்ணீரில் கால் மணி நேரம் ஊறவிடவும். நீங்கள் வறுத்து சாப்பிட விரும்பினால் உப்புக்கண்டத்தை நன்கு இடித்து மிளகாய் தூள், மிளகு தூள் போட்டு எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிடவும்.
  • தண்ணீரி ஊறிய உப்புக்கண்டத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  • எண்ணெய் சூடானதும் மூன்று மீடியம் சைஸ் வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு இரண்டு பச்சை மிளகாயை சிறிதாக வெட்டி போடவும். கொஞ்சம் கறிவேப்பிலையும் சேர்க்கலாம்.
  • அடுத்ததாக இரண்டு ஸ்பூன் இஞ்சி - பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
  • இப்போது உப்புக்கண்டத்தை போட்டு கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் கரம் மசாலா, அரை ஸ்பூன் தனியா தூள் போட்டு கலந்துவிடவும்.
  • இறுதியாக ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
  • சூப்பரான உப்புக்கண்டம் குழம்பு ரெடி. சுடு சோறில் போட்டு சாப்பிட்டு மெய்மறந்திடவும்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP