குழந்தைகள் விரும்பும் கப் கேக்; வீட்டிலேயே சுலபமாக செய்முறை இதோ..

குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும் திண்பண்டங்களில் ஒன்றாக உள்ளது கேக்குகள். வெண்ணிலா கேக், சாக்லேட் கேக் என பலவகை இருந்தாலும் இன்றைக்கு கப் கேக் குழந்தைகளிடம் அதிகம் பிரபலமாகியுள்ளது.
image

பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகளுக்குத் தினமும் என்ன ஸ்நாக்ஸ் செய்துக் கொடுக்கலாம்? என்ற தேடல் நிச்சயம் அனைத்துத் தாய்மார்களிடம் இருக்கும். பழங்கள், நட்ஸ் வகைகள், சுண்டல், கடலை போன்ற பருப்பு வகைகளைக் கொடுத்தாலும் என்றாவது ஒரு நாள் கேக் கொடுத்து விடுங்களேன் அம்மா என்ற கெஞ்சலைக் குழந்தைகளிடம் பார்த்திருப்போம்.

கடைகளில் விற்பனையாகும் கேக்குகளில் அதிகளவு மைதா உள்ளது. தொடர்ந்து இதை சாப்பிடும் போது உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படின்னா வீட்டிலேயே கோதுமை மாவை வைத்து குழந்தைகள் விரும்பும் கப் கேக் செய்துக் கொடுக்கவும். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

கோதுமை மாவு கப் கேக்

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 1 கப்
  • சர்க்கரை - அரை கப்
  • முட்டை - 2
  • வெண்ணெய் - கால் கப்
  • பால் - கால் கப்
  • பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
  • வெண்ணிலா எசென்ஸ் - அரை தேக்கரண்டி

மேலும் படிக்க:ஆட்டுக்கறியை மென்மையாகவும், விரைவாகவும் சமைக்க... இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..!

கப் கேக் செய்யும் முறை:

  • கோதுமை மாவை வைத்து கப் கேக் செய்ய வேண்டும் என்றால், முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை, நாட்டு சர்க்கரை மற்றும் வெண்ணையை உருக்கிச் சேர்த்துக் கொண்டு நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் மற்றொரு சிறிய பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடரைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து முட்டை கலவையில் எடுத்து வைத்துள்ள கோதுமை மாவு கலவை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதோடு சுவைக்காக சிறிதளவு வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக கப் கேக் செய்வதற்காக கலந்து வைத்துள்ள அனைத்து கலவைகளையும் அச்சுகளில் அல்லது சிறிய பாத்திரத்தில் ஊற்றி 180 டிகிரி செல்சியஸில் சுமார் 20- 25 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • ஒருவேளை மைக்ரோ ஓவன் இல்லையென்றால் குக்கரில் கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் கப் கேக் அச்சுகளை வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  • வெறும் அரை மணி நேரத்தில் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் கப் கேக் ரெடி.

கப் கேக் கலவையை அச்சுகளில் ஊற்றி வேக வைப்பதற்கு முன்னதாக இதன் சுவையை மேலும் அதிகரிக்க பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை மேலாக தூவி வைத்தால் போதும். சுவையான கப் கேக் ரெடி. குழந்தைகளுக்கு ஒருமுறை இப்படி செய்துக் கொடுங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP