மதுரை மட்டன் சால்னா செய்வது எப்படி ? பரோட்டா பிரியர்களின் அமிர்தம்

மதுரையில் பரோட்டாவுக்கு கொடுக்கும் மட்டன் சால்னாவின் ருசியை நாம் வேறு ருசித்திருக்க வாய்ப்பே இல்லை. பரோட்டாவில் சால்னாவை ஊற்றி ஊறவைத்து சாப்பிடும் போது அதன் சுவை வேற லெவலில் இருக்கும்.
image

மதுரை மட்டன் சால்னாவுக்கு வேறு எந்த ஊரிலும் கிடைக்கும் சால்னாவால் ஈடுகொடுக்க முடியாது. மட்டன் சால்னாவை தொட்டு சாப்பிடாலும், கொஞ்சமாக ஊற்றி பிசைந்து சாப்பிடலாம், நிறைய சால்னா ஊற்றி ஊறவைத்து சாப்பிட்டாலும் ருசியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மதுரையில் இதை உரப்பு சால்னா என்றும் அழைக்கின்றனர். கறி குழம்பிற்கும் மட்டன் சால்னாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மதுரை மட்டன் சால்னாவின் இரகசியமே வேர்க்கடலையும், தேங்காய்ப்பாலும் தான். பத்து பேர் ருசிக்க கூடிய அளவிற்கு மட்டன் சால்னாவை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

mutton salna seivathu eppadi

மட்டன் சால்னா செய்ய தேவையானவை

  • மட்டன்
  • கடலெண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • பச்சை மிளகாய்
  • கல்பாசி
  • பிரிஞ்சி இலை
  • பட்டை
  • கிராம்பு
  • ஏலக்காய்
  • அன்னாசி பூ
  • இஞ்சி
  • பூண்டு
  • தக்காளி
  • புதினா
  • கொத்தமல்லி
  • மஞ்சள் தூள்
  • சீரகத் தூள்
  • சோம்பு
  • மல்லித் தூள்
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • தண்ணீர்
  • தேங்காய் துருவல்
  • வேர்க்கடலை
  • பொட்டுக்கடலை
  • சாதிக்காய்

குறிப்பு : கரி அடுப்பில் சமைத்தால் மட்டன் சால்னாவின் சுவை கூடுதலாக இருக்கும்.

மட்டன் சால்னா செய்முறை

  • கடாயில் 50 மில்லி கடலெண்ணெய் ஊற்றி 100 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயங்களை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கும் போதே இரண்டு பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  • அடுத்ததாக கல்பாசி இரண்டு கிராம், பிரிஞ்சி இலை இரண்டு, இடித்து நுனிக்கிய பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ மொத்தமாக ஐந்து கிராம் சேர்க்கவும்.
  • சின்ன வெங்காயம் பொன்னிறத்திற்கு மாறும் போது 20 கிராம் இஞ்சி, 60 கிராம் பூண்டு இடித்து போடவும்.
  • இஞ்சி பூண்டு வதங்கி பச்சை வாடை குறைந்தவுடன் இரண்டு நாட்டு தக்காளி நறுக்கி சேர்க்கவும்.
  • அரை கை அளவிற்கு புதினாவும், கால் கை அளவிற்கு மல்லியும் போட்டு கலந்துவிடவும்.
  • மட்டன் சால்னாவில் 200 கிராம் எலும்பு, 200 கிராம் கறி போட போகிறோம். இதனால் மட்டன் சால்னாவின் சுவை அதிகமாக இருக்கும்.
  • இப்போது மஞ்சள் தூள் கால் ஸ்பூன், சீரக தூள் நான்கு ஸ்பூன், சோம்பு அரை டீஸ்பூன் போட்டு கறியுடன் பிரட்டி விடவும்.
  • அடுத்ததாக மல்லித் தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், குழம்பு தூள் இரண்டு ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றுங்கள்.
  • தீயை குறைத்து 20 நிமிடங்களுக்கு கறியை வேக விடவும். இதன் பிறகு அரை மூடி துருவிய தேங்காய், பத்து கிராம் பொட்டுக்கடலை, பத்து கிராம் நிலக்கடலை போட்டு அரைத்து கொதிக்கும் சால்னாவில் ஊற்றவும்.
  • மீண்டும் பத்து நிமிடங்களுக்கு கொதிக்கவிட்டு இறுதியாக ஒரு ஜாதிக்காய், கொஞ்சம் கொத்தமல்லி போட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள்.
  • அட்டகாசமான மதுரை மட்டன் சால்னா ரெடி.

மேலும் படிங்கரமலான் ஸ்பெஷல் : மெய்மறக்கும் சுவையில் ஐதராபாத் மட்டன் ஹலீம்

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP