கேரளா நேந்திரன் சிப்ஸ், வாழைக்காய் சிப்ஸ் தயாரிப்பு; வீட்டிலேயே செய்தது

எல்லோருக்கும் பிடித்தமான கேரளா நேந்திரன் பழ சிப்ஸ் மற்றும் வாழைக்காய் சிப்ஸை வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது நேந்திரன் சிப்ஸ் சாப்பிடுவது அலாதி இன்பம் கொடுக்கும்.
image

சிப்ஸ் கடைக்கும் நம் கண்களின் கவனத்தை ஈர்ப்பது நேந்திரன் பழ சிப்ஸ். சபரிமலைக்கு சென்று வருபவர்கள் பிரசாதம் கொடுக்கும் போது நேந்திரன் சிப்ஸ் ருசித்து இருப்போம். உருளைக்கிழங்கு சிப்ஸ் போல் சைட் டிஷ் ஆக இல்லாமல் நேரடியாகவே சாப்பிடலாம். கடைகளில் நேந்திரன் பழ சிப்ஸ் என வாங்குகிறோம். ஆனால் இது நேந்திரன் வாழைக்காயில் இருந்து தயாரிக்க கூடியது. நேந்திரன் வாழைக்காய் தமிழகத்தின் ஒரு சில தென் மாவட்டங்களிலும், கேரள மாநிலத்திலும் கிடைக்கும். இதன் சிறப்பே தேங்காய் எண்ணெயில் வறுத்தெடுப்பது தான். நேந்திரன் வாழைக்காய் சாதாரண கடைகளில் கிடைக்காது. சந்தைகளில் வாங்கி பயன்படுத்தவும். வீட்டிலேயே நேந்திரன் சிப்ஸ் மற்றும் வாழைக்காய் சிப்ஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

kerala nendran chips

நேந்திரன் சிப்ஸ் செய்ய தேவையானவை

  • நேந்திரன் வாழைக்காய்
  • தேங்காய் எண்ணெய்
  • உப்பு
  • மஞ்சள் தூள்
  • தண்ணீர்

நேந்திரன் சிப்ஸ் செய்முறை

  • இரண்டு நேந்திரன் வாழைக்காயை தோல் உரித்து தண்ணீரில் பத்து நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
  • இதனிடையே சிறிய பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும்.
  • கடாயில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு சூடுபடுத்துங்கள். இப்போது சிப்ஸ் கட்டர் வைத்து நேந்திரன் வாழைக்காயை தேய்க்கவும்.
  • வாழைக்காய் வறுக்க தொடங்கியதும் சூட்டை குறைத்து பாத்திரத்தில் கலந்த மஞ்சள்-உப்பு-தண்ணீரில் பாதியை ஸ்பூனில் எடுத்து கடாயில் ஊற்றவும்.
  • மிதமான சூட்டில் 5-6 நிமிடங்களுக்கு நேந்திரன் சிப்ஸை வறுத்துவும். எண்ணெயில் முட்டை விடுவது நின்றவுடன் சிப்ஸை கடாயில் இருந்து எடுத்துவிடவும்.
  • எண்ணெய் வடிந்ததும் 10 நிமிடங்கள் கழித்து சாப்பிட்டு பாருங்கள். இதில் மீண்டும் உப்பு சேர்க்க தேவை இருக்காது. நீங்கள எண்ணெயில் போட்ட உப்பை வாழைக்காய் தானாக உறிஞ்சிவிடும்.

குறிப்பு : பச்சை தோல் நேந்திரன் வாழைக்காய் வாங்கி பயன்படுத்தவும்

வாழைக்காய் சிப்ஸ் செய்ய தேவையானவை

  • வாழைக்காய்
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • கடலெண்ணெய்
  • தண்ணீர்

வாழைக்காய் சிப்ஸ் செய்முறை

  • சிப்ஸ் கட்டர் பயன்படுத்தி வாழைக்காயை தேய்த்து தண்ணீரில் பீஸ் போடவும்.
  • இதில் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு 10 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.
  • கடாயில் கடலெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி வாழைக்காயில் இருக்கும் தண்ணீரை வடித்து போட்டு 5 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்தால் சுவையான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

மேலும் படிங்கஉருளைக்கிழங்கு சிப்ஸை இனி கடையில் வாங்க வேண்டாம்; வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP