வெறும் 20 நிமிடங்களில் சுவையான சோயா கட்லெட்; ரெசிபி டிப்ஸ் இதோ

விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு ருசியாக ஏதேனும் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சோயா கட்லெட் ட்ரை பண்ணுங்க.
image

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை வந்தாலே வீட்டில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவரும் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். இதுபோன்று உங்களது குழந்தைகளும் உள்ளார்களா? அப்படியென்றால் ஒருமுறையாவது சுவைமிகு மீல் மேக்கரைக் கொண்டு செய்யப்படும் சோயா கட்லெட் செய்துக் கொடுங்க. மொறு மொறுன்னு இருக்கும் போது குழந்தைகள் மீண்டும் மீண்டும் செய்துக் கொடுக்க சொல்லி அடம்பிடிப்பார்கள். இதோ உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

மொறு மொறு சோயா கட்லெட்:

  • மீல் மேக்கர் - 1 கப்
  • பச்சை மிளகாய் - 4
  • இஞ்சி - சிறிதளவு
  • பூண்டு - 3 பல்
  • சோம்பு - அரை டீஸ்பூன்
  • நறுக்கிய வெங்காயம் - அரை கப்
  • கொத்தமல்லி இலை - சிறிதளவு
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • பிரெட் துகள்கள் - அரை கப்
  • மைதா - 2 டீஸ்பூன்
  • தண்ணீர் - போதுமான அளவு

மேலும் படிக்க:ஆந்திர ஸ்டைலில் பச்சை மிளகாய் சட்னி; சுவையோடு காரமும் இருப்பதால் டேஸ்ட் வேற லெவல்

சோயா கட்லெட் செய்முறை:

  • சோயா கட்லெட் செய்வதற்கு முதலில் சூடான நீரில் மீல் மேக்கரை ஒரு 5 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின்னதாக நல்ல தண்ணீரில் 2 அல்லது 3 முறை நன்றாக கழுவிய பின்னதாக தண்ணீர் எதுவும் இல்லாமல் நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் மீல் மேக்கரையும் மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க:உணவில் சுவையை கூட்ட சிட்ரிக் அமிலத்தை எப்படி சேர்க்கலாம் என்பதை பார்க்கலாம்

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய நறுக்கி வெங்காயத்தை வதக்கவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மல்லித்தூள் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் அரைத்து வைத்துள்ள சோயா கலவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு 5 நிமிடங்களுக்கு இந்த கலவையை நன்கு வதக்கிக் கொண்டு தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் வேக வைத்த இரண்டு உருளைக்கிழங்கை மசித்து கலந்துக் கொள்ளவும். இதோடு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் அரிசி மாவு கலந்துக் கொண்டு கட்லெட் போன்று தட்டி எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள மைதா மாவைத் தொட்டு பிரெட் துகள்களில் தடவி, எண்ணெய் போட்டு பொரித்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சோயா அதாவது மீல் மேக்கர் கட்லெட் ரெடி.

குறிப்பு:பிரெட் துகள்களில் போட்டு பொரித்து எரித்தால் மொறு மொறுவென்று இருக்கும். ஒருவேளை வீட்டில் பிரெட் துகள்கள் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். வீட்டில் உள்ள பிரெட்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொண்டு, வாணலில் வறுத்து எடுத்தால் போதும் பிரெட் துகள்கள் ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP