ஒவ்வொரு நாளும் மதிய உணவிற்கு என்ன சமைக்கலாம்? என்ற தேடல் நிச்சயம் அனைத்துத் தாய்மார்களும் இருக்கும். வழக்கம் போன்று சாம்பார், புளிக்குழம்பு, லெமன், தயிர் சாதம் போன்றில்லாமல் வித்தியாசமான சுவையுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் மசாலாப் பொருட்களைக் கொண்டு ருசியான மசாலா தேங்காய் சாதம் ரெடி பண்ணுங்க. இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.
மசாலா தேங்காய் சாதம்:
தேவையான பொருட்கள்:
- தேங்காய் - 1
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகாய் வத்தல் - 2
- கடுகு - சிறிதளவு
- வேக வைத்த சாதம் - ஒரு கப்
- எண்ணெய் - தேவையான அளவு
- சீரகம் - கால் டீஸ்பூன்
- கடலை பருப்பு - சிறிதளவு
- முந்திரி - 10
- பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
- உப்பு - சிறிதளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
மசாலா தேங்காய் சாதம் செய்முறை:
ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த மசாலா தேங்காய் சாதம் செய்வதற்கு முதலில் மசாலா அரைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் வத்தல், சிறிதளவு கடுகு போன்றவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.
- இதையடுத்து ஒரு பாத்திரத்தில் அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். சிறிதளவு கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வத்தல் போன்றவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வாசத்திற்கு சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு 5 நிமிடங்களுக்குப் பிறகு இதனுடன் ஏற்கனவே அரைத்து வைக்கப்பட்டுள்ள தேங்காய் விழுதை பச்சை வாசனை போகும் வரை 3 முதல் 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கவும்.
- தற்போது மசாலா தேங்காய் சாதம் செய்வதற்கான கலவை ரெடி. இறுதியாக வேக வைத்து எடுத்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும். ஏற்கனவே உப்பு சேர்த்து சாதம் செய்திருப்பதால், தேவைப்படும் பட்சத்தில் மேலும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகளை லேசாக தூவினால் போதும். சுவையான மசாலா தேங்காய் சாதம் ரெடி. வழக்கமாக செய்யும் தேங்காய் சாதத்தைப் போன்றில்லாமல் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். இதற்கு துவையல், ஆம்லேட், தயிர் வெங்காயம் போன்றவற்றை வைத்து பரிமாறலாம்.
Image credit - Freepik
Image credit - Freepik
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation