இருட்டுக் கடை அல்வா ருசிக்கணுமா ? பக்காவான செய்முறை தெரிஞ்சுகோங்க

திருநெல்வேலி என்றால் நமக்கு உடனடியாக தோன்றுவது இருட்டுக் கடை அல்வா தான். இருட்டுக் கடை அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம். சரியான பக்குவதத்தில் சுவை குறையாமல் இருட்டுக் கடை அல்வா செய்து ருசிக்கலாம்.
image

ஒவ்வொரு ஊருக்கும் தனித்தனி உணவு அடையாளம் உண்டு. திருநெல்வேலி என்றவுடன் அனைவரும் உச்சரிப்பது அல்வா. திருநெல்வேலியில் தாமிபரணி ஆற்று நீர் கொண்டு செய்யப்படும் அல்வாவிற்கு ஈடு இணையே கிடையாது. திருநெல்வேலியில் பல விதமான அல்வா கிடைத்தாலும் இருட்டு கடை அல்வாவின் சுவை தனித்துவமானது. திருநெல்வேலிக்கு செல்லும் பலரும் இருட்டுக் கடை அல்வாவை ருசிக்க தவறுவதில்லை. வீட்டில் பலமுறை முயற்சித்தாலும் அடிப்படை தவறுகளால் சரியான பக்குவத்தில் இருட்டு கடை அல்வாவை செய்ய முடியாமல் போகிறது. இருட்டு கடை அல்வா செய்வதற்கு முழு கோதுமையை எட்டு மணி நேரம் ஊறவைத்து அதன் பிறகு அரைத்து கோதுமை பால் எடுத்து புளிக்கவிட்டு அல்வா செய்வார்கள். முறைப்படி இருட்டுக் கடை அல்வா எப்படி வீட்டில் செய்வது என பார்போம்.

iruttu kadai halwa recipe

இருட்டுக் கடை அல்வா செய்ய தேவையானவை

  • கோதுமை
  • சர்க்கரை
  • நெய்
  • முந்திரி

குறிப்பு - முழு கோதுமை கிடைக்காத பட்சத்தில் கோதுமை மாவு பயன்படுத்தவும்.

இருட்டுக் கடை அல்வா செய்முறை

  • முதலில் இரண்டு கப் கோதுமை மாவு எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து விடவும்.
  • சப்பாத்தி மாவு போல் பிசைந்தவுடன் சுமார் ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றி தண்ணீரில் 5-6 மணி நேரம் ஊறவிடுங்கள்.
  • இப்போது கை வைத்து கரைத்துவிட்டு பாலின் பக்குவத்திற்கு மாற்றுங்கள். இதை வடிகட்டிவிடவும். கரையாத கொஞ்சம் மாவினை ஒதுக்கிவிடவும்.
  • கோதுமை பாலினை இரவு முழுக்க ஊறவைக்கவும். நிறைய பேர் கோதுமை மாவில் நேரடியாக நெய் சேர்த்து அல்வா கிண்டுவர். அப்படி செய்தால் உண்மையான இருட்டுக் கடை அல்வா சுவை கிடைக்காது.
  • கோதுமை பால் இரவு முழுக்க ஊறிய பிறகு மேலே அடை போல் இருக்கும் தண்ணீரை ஸ்பூன் வைத்து எடுத்துவிடவும்.
  • இப்போது பெரிய கடாயில் கோதுமை பால் ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிட்டு கிண்டவும். அல்வா தொடர்ந்து கிண்ட வேண்டும். கொஞ்சம் விட்டாலும் பக்குவம் வராது.
  • 15 நிமிடங்களுக்கு பிறகு கோதுமை பால் கெட்டியாக மாறும் போது மூன்று கப் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைவதால் கோதுமை பாலின் பக்குவம் சற்று மாறும். ஆனால் தொடர்ந்து கிண்டவும் அது கெட்டியாக வரும்.
  • தனியாக ஒரு கப் சர்க்கரையை சூடுபடுத்தி தண்ணீர் ஊற்றாமல் கேரமெல் தயாரிக்கவும். பிரவுன் நிறத்திற்கு மாறி கொஞ்சம் பொங்கியவுடன் அடுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள்.
  • இதை கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை பாலில் சேர்த்து கிண்டுவதை தொடருங்கள். இருட்டுக் கடை அல்வா செய்வதற்கு ஒரு மணி நேரம் வரை எடுக்கும்.
  • இறுதியாக 200 மில்லி நெய் ஊற்றி மீண்டும் கிண்டுவதை தொடருங்கள். கோதுமை நன்கு நெய்யை ஈர்த்து கொஞ்சமாக வெளிவிடும்.
  • இதன் பிறகு நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள்.
  • அடுப்பில் இருந்து எடுக்கும் போது அல்வா கைகளில் ஒட்டக்கூடாது. இதுவே சரியான இருட்டுக் கடை அல்வா பக்குவம்.

மேலும் படிங்கஉகாதி பண்டிகைக்கு ருசிக்க வேண்டிய 4 ஸ்பெஷல் ஸ்வீட்ஸின் செய்முறை

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP