மோர் மிளகாய், வெங்காய வடகத்தை சுலபமாக வீட்டு மாடியிலேயே செய்யலாம்

கொளுத்தும் வெயிலை பயன்படுத்தி வீட்டில் மோர் மிளகாய் மற்றும் வெங்காய வடகம் செய்வதற்கான நேரம் இது. மோர் மிளகாய், வெங்காய வடகம் தயாரித்து வைத்தால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
image

வெயில் காலத்தில் வீட்டில் அம்மாவும், பாட்டியும் அரிசி வடகம், வெங்காய வடகம், மோர் மிளகாய் தயாரிப்பதை பார்த்திருப்போம். நன்றாக வெயில் அடிக்கும் போது இதை செய்து வைத்துக் கொண்டால் தேவையான நேரங்களில் எடுத்து எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். ஆறு மாதங்களுக்கு இவற்றை தாராளமாக பயன்படுத்தலாம். இதெல்லாம் அந்த காலம். இப்போது யாரும் வீட்டு மாடியில் அரிசி வடகம், வெங்காய வடகம், மோர் மிளகாய் செய்து காய வைப்பதில்லை. ரசம் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதத்துடன் வடகம் வைத்து சாப்பிடுவது மெய் மறக்கும் ருசியாக இருக்கும். வாருங்கள் மோர் மிளகாய், வெங்காய வடகம் எப்படி செய்வது என பார்க்கலாம்.

mor milagai

மோர் மிளகாய் செய்ய தேவையானவை

  • பச்சை மிளகாய்
  • தயிர்
  • தண்ணீர்
  • கல் உப்பு

குறிப்பு : குண்டு பச்சை மிளகாய் அல்லது நீள பச்சை மிளகாய் நீங்கள் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

மோர் மிளகாய் செய்முறை

  • முக்கால் கிலோ பச்சை மிளகாய் தண்ணீரில் நன்கு எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய்களை கீழ் இருந்து பாதியாக வெட்டிவிடவும்.
  • 400 மில்லி தயிரில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து இரண்டு ஸ்பூன் இடித்த கல் உப்பு சேர்க்கவும்.
  • பச்சை மிளகாய்களை மோரில் போட்டு ஒரு நாள் முழுக்க ஊறவிடுங்கள். இப்போது மோரை வடிகட்டி பெரிய தட்டிற்கு மிளகாய்களை மாற்றி வெயிலில் காலை முதல் மாலை வரை காயவிடவும்.
  • இரவில் மிளகாய்களை மீதமுள்ள மோரில் போட்டு ஊறவைத்து அடுத்த நாள் காலை மீண்டும் வெயிலில் காய விடுங்கள். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இப்படி செய்யவும்.
  • அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு மிளகாய்களை வெயிலில் காயவிடுங்கள். மோர் மிளகாய் ரெடி. தேவையான போது இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

வெங்காய வடகம் செய்ய தேவையானவை

  • சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • உளுந்தம் கருப்பு
  • கடுகு, உளுந்து
  • சீரகம்
  • பூண்டு
  • கல் உப்பு
  • பெருங்காயம்
chinna vengaya vadagam

வெங்காய வடகம் செய்முறை

  • அரை கப் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி கால் மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும். அதன் பிறகு பத்து காய்ந்த மிளகாய், கால் ஸ்பூன் பெருங்காயம், ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  • அடுத்ததாக ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் தோல் நீக்கி பொடிதாக நறுக்கிவிடவும். இதனுடன் இடித்த பல் பூண்டு பத்து, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து, கறிவேப்பிலையை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
  • மிக்ஸியில் அரைத்ததையும் இதையும் சேர்த்து கைகளால் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு பிசையவும்.
  • கைகளில் எண்ணெய் தடவி விருப்பமான அளவுகளில் உருண்டை பிடித்து பெரிய பாத்திரத்தில் வைக்கவும்.
  • பத்து நாட்களுக்கு வெயிலில் காயவிடுங்கள். நிறம் முற்றிலும் மாறி இருக்கும். தேவையான போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் படிங்கவீட்டிலேயே தயாரித்த சாம்பார், ரசப் பொடி; சுவையும் மணமும் அள்ளுதே

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP