தமிழர் கலாச்சாரத்தில் மிகவும் முக்கியமான ஒரு மாதம் இந்த ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆடி வெள்ளி ஆடி பூஜை ஆடிப்பெருக்கு போன்ற விசேஷ நாட்களில் நம் வீடுகளில் இனிப்பு வகைகளை தயாரித்து குடும்பத்தினருடன் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கம். ஆடி மாதம் என்றால் பலருக்கும் ராகி கூழ் தான் நினைவிற்கு வரும். அதையும் தாண்டி பல ஸ்பெஷல் இனிப்பு வகைகள் இந்த ஆடி மாதத்தில் சமைத்து அம்மனுக்கு படைக்கப்படுகிறது. அந்த வரிசையில் ஆடி ஸ்பெஷல் சுவையான ஆரோக்கியமான கருப்பு கவுனி பாயாசம் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கருப்பு கவுனி அரிசியை நன்றாக கழுவி குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு நாம் ஊற வைத்த அரிசியை ஒரு குக்கரில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நாலு விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான அளவு தேங்காயை அரைத்து தேங்காய் பாலை தனியாக எடுத்து வைக்க வேண்டும். இதனை அடுத்து பாயாசம் தயாரிக்க ஒரு பாத்திரத்தில் வேகவைத்த அரிசியை கொதிக்க வைத்து, அதில் தேங்காய் பாலை சேர்த்து கலக்கவும்.
ஐந்து நிமிடம் பிறகு இதில் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்து கரைய விடுங்கள். இதற்குப் பிறகு மீண்டும் சிறிதளவு தேங்காய் பாலை ஊற்றி கிளற வேண்டும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க பாயாசம் கெட்டியாக மாறி வரும். இறுதியாக நாம் எடுத்து வைத்த தேங்காய் பால் மொத்தமும் இதில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு ஏலக்காய் தோலை தூவ வேண்டும்.
மேலும் படிக்க: ஆடி ஸ்பெஷல்: அம்மனுக்கு படைக்கும் சுவையான ஆடிப்பால்; செய்வது எப்படி?
இப்போது அடுப்பை அணைத்து விட்டு இதை இறக்கி வைத்து விடுங்கள். பிறகு ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி நெய் சூடு ஆனதும் முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து இதை பாயாசத்தில் சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆடி ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி பாயசம் தயார். இந்த சுவையான ஆடி ஸ்பெஷல் கருப்பு கவுனி பாயாசத்தை சூடாகவும் பரிமாறலாம் அல்லது சிறிது குளிர் வைத்து பரிமாறலாம், இரண்டுமே தனி சுவையில் இருக்கும்.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com