herzindagi
image

வழக்கமானக் கேக்கிற்கு மாற்றாக ஏதாவது சாப்பிடணுமா? பூசணிக்காய் ரோல் செய்யலாம் வாங்க!

குழந்தைகளுக்கு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது பூசணிக்காள் கொண்டு ரோல் செய்து சாப்பிடலாம் வாங்க.
Editorial
Updated:- 2025-09-10, 13:09 IST

குழந்தைகளுக்குக் காலாண்டு தேர்வு விடுமுறை ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. தொடர்ந்து 10 நாட்கள் குழந்தைகள் வீடுகளில் தான் இருப்பார்கள். இந்த நாட்களில் குழந்தைகளுக்கு வித்தியாசமாக ஏதாவது உணவு வகைகள் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் ஒருமுறையாவது ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பூசணிக்காயைக் கொண்டு ரோல் செய்துக் கொடுங்க. வெஜ், சிக்கன் ரோல் போன்ற ரெசிபிகளுக்கு மாற்ற அமைவதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதோ அதற்கான செய்முறை விளக்கம் இங்கே.

மேலும் படிக்க: 10 நிமிடங்களில் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாமா? எளிய செய்முறை இங்கே!

சுவையான பூசணி ரோல் ரெசிபி:

தேவையான பொருட்கள்:

  • பூசணிக்காய் - கால் கப்
  • சமையல் சோடா - 1 டீஸ்பூன்
  • இலவங்கப்பட்டை தூள் - அரை டீஸ்பூன்
  • மைதா அல்லது கோதுமை மாவு - அரை கப்
  • முட்டை - 3
  • நாட்டு சர்க்கரை - 1 கப்
  • சீஸ் கிரீம் - 200 கிராம்
  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • ஐசிங் சர்க்கரை - 1 கப்
  • வெண்ணிலா எசென்ஸ் - சிறிதளவு
  • வால்நட், பாதாம், பிஸ்தா - சிறிதளவு


மேலும் படிக்க: சுவையான கிரீமி காளான் சூப் சிம்பிளா இப்படி செய்யுங்க!

பூசணி ரோல் செய்முறை:

  • சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பூசணி ரோல் செய்வதற்கு முதலில் பூசணிக்காயை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி அல்லது ப்ளெண்டரில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் மைதா மாவு, சமையல் சோடா, இலவங்கப்பட்டை தூள் போன்றவற்றை சளித்து கலந்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டை உடைத்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நுரை வரும் அளவிற்கு ப்ளெண்டர் செய்துக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பூசணிக்காய் கலவை மற்றும் மாவு போன்றவற்றை உடன் சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் க்ரீமியாக வரும் வரை நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: காரசாரமான காரைக்குடி இறால் மசாலா ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக

  • இவை அனைத்தையும் பட்டர் சீட்டில் வைத்து பேக் செய்துக் கொள்ளவும். மைக்ரோ ஓவன் இல்லையென்றால் குக்கரில் பேக் செய்து எடுக்கலாம்.
  • கேக் பேக் செய்யக்கூடிய நேரத்தில் ஒரு சிறிய கிண்ணத்தில் சீஸ் கிரீம், வெண்ணெய், ஐசிங் சர்க்கரை போன்றவற்றை நன்கு கலந்துக் கொள்ளவும். இதனுடன் கொஞ்சமாக வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  • இறுதியாக பேக் செய்து வைத்துள்ள கேக் மீது வெண்ணிலா எசென்ஸ் கலந்த கலவைத் தடவிக் கொள்ளவும். பின்னர் பேக்கில் சுற்றி ஒரு மணி நேரத்திற்கு ப்ரீட்ஜில் வைத்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் கிரிமீயான பூசணி ரோல் ரெடி.
  • இதை உங்களுக்குத் தேவைப்படக்கூடிய அளவுகளில் வெட்டி எடுத்துப் பரிமாறினால் போதும். சுவையான பூசணி ரோல் ரெடி.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com