ஆந்திர ஸ்டைலில் உருளைக்கிழங்கு வெண்டை பொரியல் செய்துக் கொடுங்க; சுவை வேற லெவலில் இருக்கும்

வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை பலருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக குழந்தைகள் வெண்டைக்காய் என்றாலே அலறி ஓடுகின்றனர். இதன் ஊட்டச்சத்துக்களைப் பெற வேண்டும் என்றால் குழந்தைகளுக்குப் பிடித்த உருளைக்கிழங்குடன் வெண்டைக்காயைச் சேர்த்து பொரியல் செய்து அசத்துங்க.
image

வெண்டைக்காய் சாப்பிடு.. கணக்கு நல்லா போடுவ என்ற இந்த வார்த்தைகளை நம்முடைய சிறு வயதில் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். அந்தளவிற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்களைத் தன் வசம் கொண்டுள்ள காய்கறிகளில் ஒன்றாக உள்ளது வெண்டைக்காய். ஆனாலும் வெண்டைக்காய் என்றாலே குழந்தைகள் அலறி ஓடுவார்கள். எப்படியாது குழந்தைகளுக்கு வெண்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் ஆந்திர ஸ்டைலில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உருளைக்கிழங்குடன் வெண்டைக்காயைச் சேர்த்து பொரியல் செய்துக் கொடுங்கள். நிச்சயம் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவார்கள். உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இங்கே.

ஆந்திர ஸ்டைலில் உருளை வெண்டை பொரியல்:

வெண்டைக்காயில் வழவழப்புத் தன்மையைப் போக்கி மொறு மொறுன்னு செய்யக்கூடிய ஆந்திர ஸ்பெஷல் உருளைக்கிழங்கு வெண்டை பொரியல் செய்வதற்கு முதலில் கீழ்க்காணும் அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:கேரளத்து ஸ்டைலில் மீன் பிரியாணி ரெசிபியை இப்படி ட்ரை பண்ணுங்க

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு - அரை கிலோ
  • வெண்டைக்காய் - அரை கிலோ
  • மிளகாய் வத்தல் - 50 கிராம்
  • நிலக்கடலை - 50 கிராம்
  • கடுகு - தாளிப்பதற்கு ஏற்ப
  • மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • கறிவேப்பிலை

ladies finger and potato

உருளை வெண்டைக்காய் பொரியல் செய்முறை:

  • ஆந்திர ஸ்டைலில் உருளை வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முதலில் பொடி அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு கடாயில் நிலக்கடலை, மிளகாய் வத்தல், கறிவேப்பிலை போன்றவற்றை நன்கு வதக்கிக் கொண்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அதே கடாயில் வெண்டைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றைத் தனித்தனியாக வதக்கி விட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • இதனுடன் நறுக்கி வெங்காயம் மல்லித்தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

மேலும் படிக்க:உடலுக்கு ஆற்றலை வழங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா ரெசிபி டிப்ஸ்

  • சிறிது நேரத்திற்குப் பிறகு ஏற்கனவே வதக்கி எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெண்டைக்காயையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள நிலக்கடலை, மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை பொடியை மேல் தூவி சில நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஆந்திர ஸ்பெஷல் வெண்டைக்காய் உருளை பொரியல் ரெடி.
  • இந்த முறையில் ஆந்திர ஸ்பெஷல் உருளைக்கிழங்கு வெண்டைக்காய் பொரியல் செய்துப்பாருங்கள். நிச்சயம் வெண்டைக்காய் வேண்டாம் என்று சொல்பவர்கள் கூட மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP