கேரளத்து ஸ்டைலில் மீன் பிரியாணி ரெசிபியை இப்படி ட்ரை பண்ணுங்க

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான உணவுகள் மிகவும் பிரபலமானதாக இருக்கும். இந்த வரிசையில் இன்றைக்கு கேரள மாநில ஸ்பெஷல் மீன் பிரியாணி ட்ரை பண்ணலாம்..  
image

பிரியாணி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ரெசிபிகளில் ஒன்று. என்ன தான் விதமாக விதமாக சமைத்து வைத்தாலும் பிரியாணி என்றவுடன் நம்மை அறியாமல் மனம் அதை மட்டும் தான் தேடும். இப்படி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ரெசிபியை சிக்கன், மட்டன், இறால் என ட்ரை பண்ணுவதை நிறுத்திவிட்டு கொஞ்சம் மீனை வைத்து பிரியாணி செய்யலாமா? அதுவும் கேரளத்து ஸ்டைலில் மீன் பிரியாணி எப்படி செய்யலாம்? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

கேரளத்து ஸ்டைல் மீன் பிரியாணி:

  • மீன் - 1 கிலோ
  • கைமா அரிசி ( கேரளத்து ஸ்பெஷல்) - 1 கிலோ
  • வெங்காயம் - 4
  • இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
  • சீரகம் - 1 ஸ்பூன்
  • கரம் மசாலா - 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - சிறிதளவு
  • .தயிர் - 1 கப்
  • பட்டை ,பிரிஞ்சி, இலவங்கபட்டை - தாளிப்பதற்கு ஏற்ப

மேலும் படிக்க:நெல்லிக்காயை வைத்து வித்தியாசமாக சட்னி ட்ரை பண்ணிறீங்களா? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இது தான்

மீன் பிரியாணி செய்முறை

  • கைமா அரிசியைக் கொண்டு மீன் பிரியாணி செய்வதற்கு முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு கழுவிய பின்னதாக சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
  • பின்னர் மசாலா தூள்களைச் சேர்த்து சிறிது நேரத்திற்கு நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தயிர் 1 கப், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து 10 நிமிடங்களுக்கு வதக்கிக்கொள்ளவும்.
  • இதையடுத்து ஏற்கனவே சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
  • ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசியை கழுவி வெக வைக்கவும். பிரியாணி செய்வதற்கான அரிசி என்பதால் சீக்கிரமே வெந்துவிடும். எனவே மிதமான சூட்டில் வேக வைத்தால் போதும்.
  • சாதம் வெந்தவுடன் ஏற்கனவே செய்து வைத்துள்ள மீன் கிரேவியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தனியாக ஒரு பாத்திரத்தில் கிளறிக் கொள்ளவும்.

மேலும் படிக்க:ஸ்பெஷல் செட்டிநாடு காடை மிளகு வறுவல் செய்முறை; ருசியோ வேற லெவல்

  • ஒருவேளை குழந்தைகளுக்குக் காரம் பிடிக்கவில்லையென்றால் லேயர் லேயராக சாதம் மற்றும் பிரியாணிக்காக செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக் கொண்டால் போதும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை மேலே தூவி விட்டால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த மீன் பிரியாணி ரெடி.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP