உடலுக்கு ஆற்றலை வழங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா ரெசிபி டிப்ஸ்

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், நார்ச்சத்துக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
image

வீட்டில் உள்ள ஒவ்வொரு அம்மாக்களும் குழந்தைகளுக்கு ஏதாவது ருசியான உணவுகள் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். ஆனால் என்ன? புதிய ரெசிபிகள் எது செய்துக் கொடுத்தாலும் வேண்டாம் என்ற வார்த்தை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இருக்கும். இந்த சூழலில் மிகவும் சுவையோடு ஆரோக்கியத்தை மட்டும் அள்ளித்தரக்கூடிய சர்க்கரை வள்ளிக்கிழங்களை வைத்து எப்படி ருசியான புரோட்டா எப்படி செய்வது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

ஆற்றல் அளிக்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா:

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்க சில காய்கறிகள் மற்றும் கிழங்குகளைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டுதம். இவற்றில் ஒன்றான சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து புரோட்டா செய்வதற்குத் தேவையான பொருட்கள் என்ன? என்பது குறித்து முதலில் அறிந்துக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 3 கப்
  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • உப்பு- சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - சிறிதளவு
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு

  • செய்முறை:

  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு புரோட்டா செய்வதற்கு முதலில் கிழங்கை வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து வழக்கம் போல சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து இதனுடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கடாயில் போட்டு நன்கு கிளறிவிடவும்.
  • பின்னர் ஏற்கனவே பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவை திரட்டி அதற்கு நடுவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கலவையை வைத்து திரட்டிக்கொள்ளவும்.

மேலும் படிக்க:நாவிற்குக் சுவையூட்டும் பட்டர் சிக்கன் உருளைக்கிழங்கு ரெசிபி செய்முறை

  • இதை சப்பாத்திக்கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பரோட்டா ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம். அல்லது இனிப்பு சுவைக்கு கொஞ்சம் கார சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை வேற லெவலில் இருக்கும்.

sweet potato

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம், நார்ச்சத்துக்கள், மாங்கனீசு, நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்டகள், இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் பல நோய்களுக்கு நிவாரணமாக அமைகிறது. குறிப்பாக உடலில் சதை மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாாக பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் கொழுப்பு சத்துக்கள் அதிகளவில் இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் குறைந்த அளவே கொழுப்பு சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு பல வழிகளில் நன்மைப் பயக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP