Skin care: நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவில் படுக்கைக்கு செல்லும் வரை பின்பற்றும் ஒவ்வொரு பழக்கமும் உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் ஆகும். ஆரோக்கியமான, பொலிவான சருமத்தை பராமரிப்பதற்கான உணவு முறைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Benefits of black raisins: வெறும் வயிற்றில் கருப்பு உலர் திராட்சை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்
ஆரோக்கியமான சருமம் எவருடைய தோற்றத்திற்கும் ஒரு தனி அழகை சேர்க்கிறது என்பதை மறுக்க முடியாது. நிறம் எதுவாக இருந்தாலும், இயற்கையாகவே பளபளக்கும் சருமம் உங்களை எந்த கூட்டத்திலும் தனித்து நிற்கச் செய்யும். இந்த பொலிவு மேக்கப் அல்லது ஃபேர்னஸ் க்ரீம்களில் இருந்து வருவதில்லை; இது நல்ல ஆரோக்கியத்தில் இருந்து தொடங்குகிறது.
ஆரோக்கியமான சருமம் என்பது நன்கு ஊட்டச்சத்து பெற்ற, சுறுசுறுப்பான உடலின் பிரதிபலிப்பு. உங்கள் சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் இருக்கும்போது, அது உங்கள் தோற்றத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கிறது. இதற்காக நீங்கள் பின்பற்றக் கூடிய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் குறித்து தற்போது காணலாம்.
சருமத்தில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் நீர்ச்சத்து தேவை. எனவே, நீங்கள் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். நாள் முழுவதும் அவ்வப்போது தண்ணீர் அருந்துங்கள். சரியான அளவு என்பது உங்கள் உடல் வகை மற்றும் செயல்பாட்டு அளவை பொறுத்தது என்றாலும், ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் அவசியம்.
காலை உணவுக்கு, குறைந்தது ஒரு பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சிறிது முளைக்கட்டிய பயிறு அல்லது கொண்டைக்கடலை அல்லது சில பாதாம் சேர்த்துக்கொள்ளலாம். முடிந்தால், தினமும் காலையில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் தேன் கலந்து குடியுங்கள். தேங்காய் நீர், வெள்ளரிக்காய் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், பழச்சாறுகள் அல்லது பருவகால பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜூஸ்கள் போன்ற மற்ற சிறந்த பானங்களையும் நீங்கள் அருந்தலாம்.
மேலும் படிக்க: சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க
உங்களுக்கு வசதியான நேரத்தில் சில உடற்பயிற்சிகளை செய்யுங்கள். உங்கள் காலை உடற்பயிற்சிக்கு பிறகு அல்லது காலை உணவுக்கு இடையில் சாலடுகள் மற்றும் முழு தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். ரொட்டியுடன் பருப்பு மற்றும் பச்சை காய்கறிகள் ஒரு சிறந்த கலவையாகும்.
தினமும் பல காய்கறிகளை சாப்பிடுங்கள். அவற்றில் ஆந்தோசயனின்கள் நிறைந்துள்ளன. அவை கொலாஜன் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. பழங்களில், சிட்ரஸ் பழங்கள் மிகவும் நன்மை அளிக்கும். ஆரஞ்சு, கிவி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். பொரித்த அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், பீட்சா, பர்கர்கள் அல்லது டோனட்ஸ் போன்றவற்றை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, ப்ரௌன் ரைஸ், ஒரு கிண்ணம் பருப்பு, சாலட், தயிர் மற்றும் நிறைய பச்சை காய்கறிகளை தேர்ந்தெடுக்கவும். இளமையான சருமத்திற்கு புரோட்டீன் அவசியம். அசைவ உணவுகளை உண்பவர்கள் சிக்கன், முட்டை அல்லது மீனை தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆரோக்கியமற்ற உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்வு செய்யுங்கள். க்ரீன் டீ அல்லது மூலிகை டீ குடிக்கலாம். அத்துடன், வறுத்த மக்கானா, உலர் பழங்கள், வேர்க்கடலை, ஓட்ஸ் பிஸ்கட் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தி போன்றவற்றை சாப்பிடலாம்.
இரவு உணவை எளிமையாகவும், லேசாகவும் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். முழு தானியங்கள், 2-3 ரொட்டிகள், காய்கறிகள், சாலட், சூப் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவும். அசைவ உணவுகளை உண்பவர்கள் லேசான சிக்கன் சூப் அல்லது கிரில்டு மீன் சாப்பிடலாம்.
தூங்க செல்வதற்கு முன், ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்த்து அருந்துங்கள். முடிந்தால், சில குங்குமப்பூ இழைகளை சேர்க்கவும். ஒவ்வொரு இரவும் போதுமான தூக்கத்தை பெறுவதை உறுதி செய்யுங்கள். மேலும், உங்கள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். அமைதியான மனம் உங்கள் முகத்தில் பிரதிபலிக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com