herzindagi
vazhaikkai puttu

அரிசி மாவு இல்ல வாழைக்காயில் புட்டு செய்யலாம் வாங்க! எளிய சமையல் குறிப்பு இங்கே!

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வாழைக்காய் புட்டு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்று. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆற்றலை அளிக்கும் வகையில் உள்ளது.
Editorial
Updated:- 2025-11-26, 20:36 IST

தென்னிந்திய சமையலில் மிகவும் பிரபலமான, மற்றும் சுவையான ரெசிபிகளில் ஒன்றாக உள்ளது வாழைக்காய் புட்டு. வீடுகளில் மட்டுமல்ல திருமணம், புதுமனை புகுவிழா போன்ற வீட்டில் நடைபெறக்கூடிய அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் வாழைக்காய் புட்டு பிரதானமாக இருந்து வருகிறது. காரம் குறைவாக சமைப்பதால் குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். இதுவரை உங்களது வீடுகளில் வாழைக்காய் புட்டு செய்து சாப்பிட்டது இல்லையென்றால் கீழ்வரக்கூடிய சமையல் குறிப்புகளைப் பயன்படுத்தி செய்து பாருங்கள். அதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.

ஆரோக்கியம் நிறைந்த வாழைக்காய் புட்டு:

வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் புட்டு என அறியப்பட்ட இந்த ரெசிபியைச் செய்வதற்குத் தேவையான பொருட்கள் இங்கே.

தேவையான பொருட்கள்:

 

  • வாழைக்காய் - 3
  • சின்ன வெங்காயம் - 10
  • தேங்காய் துருவல் - கால் கப்
  • பச்சை மிளகாய் - 3
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • உப்பு- சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

மேலும் படிக்க:  தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்; எப்படி தெரியுமா?

வாழைக்காய் புட்டு செய்முறை:

  • தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ரெசிபிகளில் ஒன்றான வாழைக்காய் புட்டு தயார் செய்வதற்கு முதலில் வாழைக்காயைத் தோலுடன் அல்லது லேசாக தோலை நீக்கிவிட்டு வேக வைக்கவும்.
  • வாழைக்காய் ஓரளவிற்கு வெந்தவுடன் வாழைக்காய் தோலை நீக்கிவிட்டு, கேரட், பீட்ரூட் துருவுவது போன்று துருவலில் நன்கு துருவிக்கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதாக புட்டு போன்ற பதத்திற்கு லேசாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!

  • இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும் இதனுடன் துருவிய வாழைக்காய் சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கொண்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
  • இறுதியில் துருவிய தேங்காயை உடன் சேர்த்து வதக்கினால் போதும். சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வாழைக்காய் புட்டு ரெடி.

மேலும் படிக்க: உங்களது குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் வாழைப்பழ உருண்டை; சுலபமாக செய்யும் முறை இங்கே!

வாழைக்காய் புட்டு ருசியாக எப்படி செய்வது?

  • வாழைக்காய் புட்டு செய்யும் போது மிகவும் சுவையாக இருக்க வேண்டும் என்றால் முதலில் வாழைக்காயை சரியான பக்குவத்தில் வேக வைக்க வேண்டும்.
  • கொஞ்சம் புட்டு சமைக்கும் போது சுவை அதிகமாக வேண்டும் என்றால் தேங்காய் துருவல் மற்றும் முந்திரி சேர்ப்பது நல்லது.
  • பெரியவர்கள் மட்டும் சாப்பிடுகிறார்கள் என்றால், கொஞ்சம் கரம் மசாலா, மிளகாய்தூள் போன்ற மசாலாக்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

Image source - Free

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com