herzindagi
image

உங்களது குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் வாழைப்பழ உருண்டை; சுலபமாக செய்யும் முறை இங்கே!

குழந்தைகளுக்கு சுவையையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் வாழைப்பழ உருண்டையை சுலபமாக செய்யும் வழிமுறைகள் இங்கே.
Editorial
Updated:- 2025-10-28, 23:55 IST

குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் ஏதாவது ஸ்நாக்ஸ்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளதா? வழக்கமாக செய்யும் தின்பண்டங்களைச் செய்துக் கொடுத்தால் குழந்தைகள் வேண்டாம் என்று அடம்பிடிக்கிறீர்களா? கடைகளில் வாங்கிச் சாப்பிடும் பழக்கம் உள்ளதா? இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் குழந்தைகளுக்குப் பிடித்தவாறு ஊட்டச்சத்துள்ள நொறுக்குத் தீனிகளைச் செய்துக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய தின்பண்டங்கள் வெறும் சுவைக்காக மட்டுமல்லாது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். இதுபோன்ற ரெசிபிகளில் ஒன்றைத் தான் தற்போது நாம் இங்கே பார்க்க விருக்கிறோம். இன்றைக்கு குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாழைப்பழங்களைக் கொண்டு எப்படி வாழைப்பழ உருண்டை செய்யலாம் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: சமையலில் கீரையை சேர்த்துக் கொள்ளும் போது இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க; சுவையும் கூடும், ஆரோக்கியமும் மேம்படும்!

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைப்பழ உருண்டை:

தேவையான பொருட்கள்:

  • செவ்வாழை - 1 கப்
  • நெய் - 100 கிராம்
  • ரவை - ஒரு கப்
  • பால் - ஒரு கப்
  • சர்க்கரை - ஒரு கப்
  • தேங்காய் துருவல் - ஒரு கப்
  • ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்

 

மேலும் படிக்க: அவல் வைத்து ருசியாக வடை செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!


வாழைப்பழ உருண்டை செய்முறை:

  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும்.
  • நெய் கொஞ்சம் சூடேறியதும் வெட்டி வைத்துள்ள 2 செவ்வாழை பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நெய் மற்றும் செவ்வாழை இரண்டும் நன்கு வதங்கி வரும் போது, ஒரு கப் ரவையை உடன் சேர்க்கவும்.
  • ஒரு ஐந்து நிமிடத்திற்கு நன்கு வதக்கிய பின்னதாக தேங்காய் துருவலையும் உடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  • இதனுடன் ஒரு கப் பால் சேர்த்து ரவையை நன்கு வேக வைக்கவும். பின்னர் இதனுடன் ஒரு கப் சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • இந்த கலவையை மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடத்திற்கு வைத்திருக்கவும்.
  • கை தாங்கும் சூடு இருக்கும் போது சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி உருட்டி வைத்துள்ள உருண்டைகளையும் உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த உருண்டைகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து லேசாக பொரித்து எடுத்தால் போதும். சுவையான வாழைப்பழ உருண்டை ரெடி.
  • இனிப்பு மற்றும் சுவைக்கு ஏலக்காய் தூள் சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். செவ்வாழை, பால் மற்றும் நெய்யில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.

 Image Credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com