herzindagi
image

நலங்கு மாவு தரும் முகப்பொலிவு; வீட்டில் எப்படி தயார் செய்வது தெரியுமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவ்வித கெமிக்கல் இல்லாமல் முகத்தைப் பொலிவாக்க வேண்டும் என்று நினைத்தால் வீட்டிலேயே நலங்கு மாவு தயார் செய்துப் பயன்படுத்துங்க.
Editorial
Updated:- 2025-10-25, 23:12 IST

இன்றைக்கு சந்தையில் விதவிதமான குளியல் சோப்புகள் விற்பனையாகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கென பிரத்யேகமான பல சோப்புகள் விற்பனை செய்யப்பட்டாலும் நிச்சயம் ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்திருப்பார்கள். இதனால் பல நேரங்களில் உடலில் அரிப்பு, அழற்சி போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதுபோன்ற பல காரணங்களால் தான் நம்முடைய முன்னோர்கள் குளியல் பொடியைத் தாங்களே தயார் செய்து உபயோகித்து வந்தனர்.

நலங்கு மாவு என்றழைக்கப்படும் குளியல் பொடியில் சேர்க்கப்படும் பல்வேறு மூலிகைகள் முகத்தைப் பொலிவைத் தருவதோடு தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைனகள் ஏற்பட வாய்ப்பில்லை. இதுவரை நலங்கு மாவு உபயோகித்தது இல்லையென்றால் இதோ எப்படி தயாரிக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்துக் கொண்டு உடனே வீட்டில் தயார் செய்ய முயற்சி செய்யுங்கள்.

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சி முதல் சருமப் பொலிவு வரை... தேங்காயின் நன்மைகள்!

முகத்தைப் பொலிவாக்கும் நலங்கு மாவு:

தேவையான பொருட்கள்:

  • கஸ்தூரி மஞ்சள் - 300 கிராம்
  • பூலாங்கிழங்கு- 150 கிராம்
  • ரோஜா பூ - 100 கிராம்
  • அம்மன் பச்சரிசி- 150 கிராம்
  • ஆவாரம் பூ- 100 கிராம்
  • கோரங்கிழங்கு - 50 கிராம்
  • கல்பாசி - 50 கிராம்
  • அதிமதுரம் - 100 கிராம்
  • பச்சிலை - 100 கிராம்
  • மரிக்கொழுந்து - 100 கிராம்
  • திருமஞ்சணபட்டை - 150 கிராம்
  • பாசிப்பயறு - 50 கிராம்
  • கடலைப் பருப்பு - 100 கிராம்
  • வேப்பிலை - அரை கப்

மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும் ஆளி விதைகளை பயன்படுத்தும் எளிய முறை

நலங்கு மாவு தயார் செய்யும் முறை:

  • முகத்தைப் பொலிவாக்கும் நலங்கு மாவு தயார் செய்வதற்கு முதலில் மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
  • இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிய பின்னதாக, நிழற்காய்ச்சலில் காய வைக்கவும்.
  • பின்னர் வீட்டில் உள்ள மிக்ஸி ஜாரில் அல்லது ரைஸ் மில்லில் அரைத்தால் போதும் நலங்கு மாவு ரெடி.

பயன்படுத்தும் முறை:

  • மேற்கூறிய படி தயார் செய்த நலங்கு மாவு பொடியை சிறிதளவு பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு தண்ணீர் அல்லது பால் கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்துக் கொள்ளவும்.
  • இதை முகத்தில் அப்ளை செய்து சுமார் 30 நிமிடங்களுக்குப் பின்னதாக முகத்தைக் குளிரந்த நீரால் கழுவினால் போதும். முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்கும் நலங்கு மாவு ரெடி.
  • கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட அனைத்து மூலிகைகளிலும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதோடு பிரகாசமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com