herzindagi
image

பிரட்டை வைத்து குழந்தைகளுக்குப் பிடித்த குளோப் ஜாமூன் செய்யலாம் வாங்க; எளிய செய்முறை இங்கே!

வீட்டிலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் பிரட் குளோப் ஜாமூன் எப்படி செய்வது என்பது குறித்த சமையல் குறிப்புகள் இங்கே.
Editorial
Updated:- 2025-10-01, 16:38 IST

இனிப்பு என்றால் யாருக்குப் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போட்டிப் போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். அதிலும் வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் என்றால் சர்க்கரை பொங்கல், கேசரி, பாயாசம், குளோப் ஜாமூன் போன்றவை தான் பிரதானமாக இருக்கும். வழக்கம் போல் ஒரே மாதிரியான இனிப்பு பலகாரங்கள் செய்து உங்களுக்கு சளிப்பாகிவிட்டது என்றால் ஒருமுறையாவது பிரெட் வைத்து சுவையான குளோப் ஜாமூன் செய்யலாம் செய்துப் பாருங்கள். இதோ அதற்கான எளிய செய்முறை இங்கே.

மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!

பிரெட் குளோப் ஜாமூன்:

தேவையான பொருட்கள்:

  • பிரட் - 5
  • பால் பவுடர் - 2 டீஸ்பூன்
  • பால் - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப
  • சர்க்கரை- ஒரு கப்
  • எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் - கால் டீஸ்பூன்
  • குங்குமப்பூ - சிறிதளவு

 மேலும் படிக்க: புரோட்டீன் நிறைந்த காலை உணவுகள் என்னென்ன தெரியுமா? சுலபமாக செய்யும் முறை இங்கே!

பிரட் குளோப் ஜாமூன் செய்முறை:

  • குழந்தைகளுக்கு விருப்பமான குளோப் ஜாமூன் செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் பிரட்டுகளை சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் நைஸாக பவுடர் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி இதனுடன் பால் பவுடர் சேர்ந்து கலந்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக பாலை ஊற்றி மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

 

  • பிரட் மற்றும் பால் பவுடர் கலவையுடன் சிறிதளவு நெய் சேர்த்து பிசையும் போது உருண்டை மென்மையாகவம், ருசியாகவும் இருக்கும். இதை குளோப் ஜாமூனுக்கு ஏற்றவாறு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்..
  • ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, ஏலக்காய் பவுடர், குங்குமப் பூ கிடைத்தால் இதையும் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும்.

  மேலும் படிக்க: ஆறு மாத குழந்தைகளுக்குக் கட்டாயம் இந்த உணவுகளைக் கொடுத்திடுங்க;  முழு விபரம் இங்கே

 

  • பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக காய்ச்சி வைத்துள்ள சர்க்கரை பாகுடன் சேர்த்து ஊற வைத்தால் போதும் சுவையான பிரட் குளோப் ஜாமூன் ரெடி.
  • இனி குளோப் ஜாமூன் மாவு பாக்கெட் இல்லையென்ற கவலை வேண்டாம். பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பும் உங்களது குழந்தைகளுக்கு பிரெட் பாக்கெட்டுகளை வைத்து சுவையான குளோப் ஜாமூன் செய்து சாப்பிடுங்கள். ஒருமுறை செய்து சாப்பிட்டால் போதும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று நிச்சயம் உங்களது குழந்தைகள் அடம்பிடிப்பார்கள்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com