
உலகளவில் உயிரிழப்புகளுக்கான முதன்மை காரணமாக இருப்பது இருதய நோய்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 17.9 மில்லியன் மரணங்களுக்கு இவை காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இருதய நோய்களில், ஐந்தில் நான்கு பங்கு மரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவற்றால் ஏற்படுகின்றன.
இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக அவசியம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இருதய நோய்கள், குறிப்பாக இளைஞர்களிடையே, அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
இருதய ஆரோக்கியத்தில் நாம் உண்ணும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சீரான மற்றும் சத்தான உணவை உட்கொள்வது அவசியம் என்றாலும், சில குறிப்பிட்ட உணவுகள் இருதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும் திறன் கொண்டவை.
அந்த வகையில், தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இந்தப் பழம் அதன் சத்துகளால், குறிப்பாக பொட்டாசியம் (Potassium) சத்தால், இருதய நோய்களின் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மேலும் படிக்க: இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இருதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும் உணவுகள்
உணவில் சோடியத்தின் (உப்பு) அளவை குறைப்பதை விட, வாழைப்பழம் போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது உங்கள் இரத்த அழுத்தத்தின் (Blood Pressure) மீது அதிக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உட்பட பல இருதய நோய்களுக்கு உயர் இரத்த அழுத்தம் (Hypertension) வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.
மேலும் படிக்க: Benefits of sundaikkai: நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும்; செரிமான மண்டலத்தை சீராக்கும் - சுண்டைக்காயில் மறைந்திருக்கும் நன்மைகள்!
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது இருதய நோய்களை தடுக்க உதவும். இது உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தாது. ஆனால், உங்கள் இருதயத்தை வலிமையாக வைத்திருக்கும். தீங்கு விளைவிக்கும் சிற்றுண்டிகளுக்கு பதிலாக, இயற்கையாக விளைந்த வாழைப்பழத்தை உணவில் சேர்க்கலாம்.

வாழைப்பழத்துடன் சேர்த்து, உங்கள் உணவில் காலிஃபிளவர், கீரைகள்,விதைகள், பெர்ரி பழங்கள், மிதமான அளவில் ஆலிவ் எண்ணெய், தக்காளி, மற்றும் கேரட் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருதய ஆரோக்கியத்திற்கு உணவு மட்டுமல்ல, மற்ற வாழ்க்கை முறை காரணிகளையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க சிறந்த வழிகளில் ஒன்று உடற்பயிற்சி. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிட உடற்பயிற்சியை இலக்காக கொள்ளுங்கள். மேலும், சத்தான மற்றும் இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com