herzindagi
image

ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!

வாழைத்தண்டைப் பயன்படுத்தி சுவையான பஜ்ஜி எப்படி செய்வது? என்பது குறித்த செய்முறை இங்கே
Editorial
Updated:- 2025-09-18, 16:45 IST

விடுமுறை நாட்கள் மட்டுமல்ல லேசாக மழை பெய்தாலே ஏதாவது சூடாக நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டும் என்ற ஆசை பெரியவர்களுக்கும் நிச்சயம் இருக்கும். இந்த நேரத்தில் சூடாக வடை, பஜ்ஜி, முறுக்கு போன்ற ஸ்நாக்ஸ்களைத் தான் பெரும்பாலும் வீடுகளில் செய்வோம். எண்ணெய் பலகாரம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்றாலும் ஆரோக்கியமான முறையில் செய்து சாப்பிட்டணும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படியென்றால் ஒருமுறையாவது வாழைத்தண்டைப் பயன்படுத்தி பஜ்ஜி செய்துப் பாருங்கள். உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க: காரசாரமாகவும் ருசியாகவும் மசால் பொடி செய்யணுமா? இந்த பொருட்களையெல்லாம் மறக்காமல் சேர்த்திடுங்க!

வாழைத்தண்டு பஜ்ஜி செய்முறை:

தேவையான பொருட்கள்:

  • வாழைத்தண்டு - ஒரு கப்
  • உப்பு - சிறிதளவு
  • பெருங்காயத் தூள் - சிறிதளவு
  • ஓமம் - கால் டீஸ்பூன்
  • அரிசி - 100 கிராம்
  • துவரம் பருப்பு - 50 கிராம்
  • கடலைப் பருப்பு - 50 கிராம்
  • மிளகாய் வத்தல் - 5
  • எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி செய்முறை:

  • மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக ரெசிபி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜியை ஒருமுறை செய்துப் பாருங்கள்.
  • வாழைத்தண்டு பஜ்ஜி செய்வதற்கு முதலில் அரிசி மற்றும் கடலை மற்றும் துவரம் பருப்பை ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
  • ஒரு மணி நேரத்திற்குப் பின்னதாக ஊற வைத்த மாவை அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த மாவுக் கலவையுடன மிளகாய் வத்தல், உப்பு, பெருங்காயத்தூள் மற்றும் ஓமம் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
  • இப்போது வாழைத்தண்டு பஜ்ஜி செய்வதற்குத் தேவையான மாவு தயாராகவுள்ளது.

  • இதன் பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் அரைத்து வைத்துள்ள மாவு கலவையுடன், வாழைத்தண்டை நனைத்து எண்ணெய்யில் போட்டு எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி ரெடி.

அதீத ஊட்டச்சத்துக்கள்:

வாழைத்தண்டில் நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி 6 போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமானம் சீராவது முதல் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடலில் எவ்வித கொழுப்புகளும் சேர்வதைத் தடுப்பதோடு உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

Image credit - Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com