herzindagi
image

தக்காளியில் பாயாசம் செய்யலாம் தெரியுமா? எளிய செய்முறை விளக்கம் இங்கே!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச்சாப்பிடும் வகையில் தக்காளி பழங்களை வைத்து எப்படி தக்காளி பாயசாம் செய்யலாம்? என்பது குறித்த எளிய செய்முறை விளக்கம் இங்கே.
Editorial
Updated:- 2025-11-06, 23:35 IST

வீட்டில் எந்தவொரு சுப நிகழ்ச்சிகள் என்றால் ஏதாவது ஒரு இனிப்பு பலகாரம் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். கேசரி, பொங்கல், பாயாசம் போன்ற இனிப்பு வகைகளைச் செய்து சாப்பிடுவோம். குறிப்பாக சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், ஆப்பிள் பாயாசம் போன்ற விதவிதமான ரெசிபிகளின் வரிசையில் இன்றைக்கு தக்காளி பழங்களை வைத்து எப்படி சுவையான பாயாசம் செய்யலாம்? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? எப்படி சுலபமான முறையில் வீட்டில் தயார் செய்யலாம்? என்பது குறித்த ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேன் நெல்லிக்காயை சுலபமாக செய்யும் முறை!

சுவையான தக்காளி பாயாசம்:

தேவையான பொருட்கள்:

  • தக்காளி - அரை கிலோ
  • அரிசி - 3 தேக்கரண்டி
  • தேங்காய் துருவல் - அரை மூடி
  • முந்திரி, திராட்சை - 10
  • ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
  • கிராம்புத்தூள் - அரை தேக்கரண்டி
  • சர்க்கரை - கால் கிலோ
  • நெய் - சிறிதளவு

மேலும் படிக்க: அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்; உங்கள் வீட்டு சமையலறையிலேயே இவை இருக்கின்றன!

ஊட்டச்சத்து நிறைந்த தக்காளி பாயாசம்:

  • தக்காளி பாயாசம் செய்வதற்கு முதலில் தக்காளி பழங்களை நன்கு கழுவி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. கொஞ்சமாக வேக வைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் அல்லது கைகளால் தக்காளியை நன்கு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். விதைகள் எதுவும் தேவையில்லையென்றால் வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: சைவ உணவுப் பிரியர்களா நீங்கள்? இரும்புச் சத்து நிறைந்த இந்த உணவுகள் உங்களுக்குத் தான்!

  • இதையடுத்து அரிசி, தேங்காய் பூ, முந்திரி மற்றும் கிராம்புத் தூள் போன்றவற்றைச் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதான அரைத்து வைத்துள்ள தக்காளி சாறையும் உடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • தற்போது தக்காளி பாயாசம் செய்வதற்கான கலவை ரெடியாகிவிட்டது. இதையடுத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தக்காளி சாறை கொதிக்க விடவும்.
  • ஐந்து நிமிடங்கள் கொதித்த பின்னதாக ஏலக்காய் மற்றும் கிராம்புத்தூள் போன்றவற்றைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
  • இறுதியாக நெய்யில் முந்திரி, திராட்சை போன்றவற்றை வறுத்து தக்காளி கலவையுடன் சேர்த்தால் போதும் சுவையான தக்காளி பாயாசம் ரெடி.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com