herzindagi
image

பாரம்பரிய அரிசியில் தீபாவளி பலகாரங்கள் செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் பாரம்பரிய அரிசியைக் கொண்டு கருப்பு கவுனி முறுக்கு, தூயமல்லி காரசேவ் போன்றவற்றை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம்.
Editorial
Updated:- 2025-10-14, 13:13 IST

தீபாவளி என்றாலே விதவிதமான பலகாரங்கள் தான் முதலில் அனைவருக்கும் நினைவில் வரக்கூடும். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடைகள் உடுத்திய பின்னதாக இனிப்பு மற்றும் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம். இதற்காக அனைவரது வீடுகளிலும் முறுக்கு, அதிசரம், காரசேவு போன்ற நொறுக்குத் தீனிகள் அதிகம் செய்வார்கள். இதையே கொஞ்சம் ஆரோக்கியமானதாக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் பாரம்பரிய அரிசியைக் கொண்டு செய்துப் பாருங்கள். இதோ அதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.

மேலும் படிக்க:  தீபாவளி பலகாரம்: வாயில் பட்டவுடன் கரையும் மைசூர்பாகு செய்யலாம் வாங்க!

பாரம்பரிய அரிசியில் தீபாவளி பலகாரங்கள்:

கருப்பு கவுனி அரிசி முறுக்கு:

தேவையான பொருட்கள்:

  • கருப்பு கவுனி அரிசி மாவு - 500 கிராம்
  • வெண்ணெய்- 3 டீஸ்பூன்
  • எள்ளு - அரை டீஸ்பூன்
  • ஓமம் - அரை டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - தேவையான அளவு

மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!

கருப்பு கவுனி அரிசி முறுக்கு செய்முறை:

  • கருப்பு கவுனி அரிசி முறுக்கு செய்வதற்கு முதலில் கவுனி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
  • இதனுடன் எள்ளு, ஓமம், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த மாவு கலவையுடன் சிறிதளவு வெண்ணெய் மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பததத்திற்குப் பிசைந்துக் கொள்ளவும். தற்போது கருப்பு கவுனி முறுக்கு செய்வதற்கான மாவு ரெடியாகிவிட்டது.
  • இதன் பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு கவுனி அரிசி முறுக்கு ரெடி.
  • கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளதால், இரத்த அளவை சீராக வைத்திருப்பதோடு, இதயம் தொடர்பான எவ்வித உடல் நல பாதிப்புகளும் ஏற்படுவதைத் தடுக்க பேருதவியாக இருக்கும்.

 

தூயமல்லி அரிசி கார சேவு:

இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, இ,புரதம், உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தூயமல்லி அரிசியில் கார சேவு செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு,எப்போதும் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கு உதவியாக உள்ளது. கார சேவு செய்யத் தேவையான பொருட்கள் என்ன? எப்படி செய்யலாம்? குறித்த செய்முறை விளக்கம்.

மேலும் படிக்க: தீபாவளி பலகாரங்கள் செய்ய ரெடியா? சுவையான பாலக் முறுக்கு செய்துப் பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

  • தூயமல்லி அரிசி மாவு - அரை கிலோ
  • மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - பொரிப்பதற்கு ஏற்ப

தூயமல்லி கார சேவு செய்முறை:

  • தூயமல்லி அரிசி மாவைக் கொண்டு கார சேவு செய்வதற்கு முதலில் தூயமல்லி அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
  • கடாயை சூடேற்றி எண்ணெய்யை காய்ச்சிக் கொள்ளவும். நன்கு காய்ந்ததும் சேவு பிழியும் அச்சத்தில் மாவை வைத்து பிழிந்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியத்துடன் கூடிய தூயமல்லி அரிசி காரசேவு ரெடி.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com