herzindagi
image

அதிக நேரம் எடுக்காது; சீக்கிரமாக சுவையான ஆப்பிள் பாயாசம் செய்யலாம்; எளிய சமையல் குறிப்புகள் இதோ!

குழந்தைகள் அதிகம் விரும்பிச்சாப்பிடக்கூடிய ஆப்பிளைக் கொண்டு ஏதாவது ரெசிபி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது ஆப்பிள் பாயாசத்தை முயற்சி செய்துப் பாருங்கள்.
Editorial
Updated:- 2025-09-15, 16:50 IST

தீபாவளி, பொங்கல், பிறந்த நாள் விழா போன்ற அனைத்து வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கும் ஏதாவது இனிப்பு வகைகள் செய்ய வேண்டும் என்றால் முதலில் பாயாசம் தான் அனைவரின் நினைவுக்கு வரக்கூடும். ஜவ்வரிசி பாயாசம், பாசிப்பருப்பு பாயாசம், கற்கண்டு பாயாசம், சேமியா பாயாசம் போன்றவை தான் பிரதான இடம் பெறும். ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய விஷேசங்களுக்கு இந்த இனிப்பு வகைகளைச் செய்யும் போது நிச்சயம் சளிப்பாகி விடும். இதற்கு மாற்றாக வெரைட்டியான பாயாசம் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? என்றால் ஒருமுறையாவது ஆப்பிளைக் கொண்டு பாயாசம் செய்து சாப்பிடுங்கள். இதுவரை செய்தது இல்லையென்றால் இதோ உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்கள் இங்கே.

மேலும் படிக்க: முதல் முறையாக சமைக்கப் போறீங்களா?  பயனுள்ள இந்த சமையல் குறிப்புகளை தெரிஞ்சிட்டு செய்யுங்கள்

குழந்தைகள் விரும்பும் ஆப்பிள் பாயாசம்:

  • ஆப்பிள் பழம் - 5
  • ஏலக்காய் - 6
  • முந்திரி- 10
  • உலர் திராட்சை - 10
  • நெய் - சிறிதளவு
  • பேரீட்சம்பழம் - 5
  • பாசிப்பருப்பு - 1 டம்ளர்
  • வெல்லம் - அரை கிலோ
  • தேங்காய் பால் - 1 டம்ளர்

மேலும் படிக்க: 10 நிமிடங்களில் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாமா? எளிய செய்முறை இங்கே!


ஆப்பிள் பாயாசம் செய்முறை:

  • குழந்தைகள் விரும்பும் சுவையான ஆப்பிள் பாயாசம் செய்வதற்கு முதலில், ஆப்பிளில் உள்ள விதைகளையும், தோல்களையும் நீக்கிக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஆப்பிளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை வேக வைக்கவும். ஓரளவிற்கு வெந்தவுடன் வெல்லத்தைப் பொடியாக்கி உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: குழந்தைகள் கொழுகொழுன்னு இருக்கணுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்க மறந்திடாதீங்க!

  • ஒரு 10 நிமிடங்களுக்குப் பின்னதாக தயார் செய்து வைத்துள்ள 1 டம்ளர் தேங்காய் பாலைச் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேணடும்.
  • பருப்பு நன்கு வெந்தவுடன் இதனுடன் ஏலக்காய், மற்றும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை உடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இறுதியாக 5 நிமிடங்களுக்குப் பிறகு ஆப்பிள் மற்றும் பேரீட்சம்பழங்களை சேர்த்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த ஆப்பிள் பாயாசம் ரெடி.

  • வாரத்திற்கு ஒருமுறை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆப்பிளைக் கொண்டு செய்யப்படும் பாயாசத்தைக் குழந்தைகளுக்குச் செய்துக் கொடுங்கள். மீண்டும் மீண்டும் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடிந்திருந்தால் அதைப் பகிரவும். மேலும் இதுபோன்ற பிற கட்டுரைகளுக்கு Herzindagi வுடன் இணைந்திருங்கள்.

Image Credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com