herzindagi
image

Diwali Special: தீபாவளிக்கு ருசியான பூசணிக்காய் பர்பி தயார் செய்யலாம் வாங்க!

தீபாவளி திருநாளில் வழக்கமான இனிப்புகளுக்கு மாற்றாக ஊட்டச்சத்துக்களுடன் கூடிய ஏதாவது இனிப்பு ஒன்று செய்யலாம் என நினைத்தால் ஒருமுறையாவது பூசணிக்காய் பர்பியை ட்ரை பண்ணுங்க  
Editorial
Updated:- 2025-10-18, 22:56 IST

தீபாவளி என்றாலே புத்தாடைகள், ப்ட்டாசுளுக்கு அடுத்தப்படியாக வீட்டில் செய்யக்கூடிய இனிப்பு வகைகள் தான் இத்திருநாளில் பிரதானமாக இடம் பெறும். ஒவ்வொரு வீட்டிலும் வழக்கம் போல தீபாவளி திருநாளுக்கு முந்தைய நாளே வீட்டில் உள்ள குளோப் ஜாமூன், அதிரசம், மைசூர் பாகு போன்ற ரெசிபிகளை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவையெல்லாம் வழக்கமாக செய்யும் இனிப்புகளாகத் தான் இருக்கும். இதோடு கொஞ்சம் கூடுதல் சுவை மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் வகையில் பூசணிக்காயைக் கொண்டு பர்பி செய்துப் பாருங்கள். கொஞ்சம் வித்தியாசமாகவும், அதீத சுவையுடனும் இருக்கும். இதோ எப்படி செய்வது? என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்த சமையல் குறிப்புகள் இங்கே.

மேலும் படிக்க: Diwali 2025: தீபாவளிக்கு கன்னியாகுமரி ஸ்பெஷல் முந்திரி கொத்து ரெசிபி செய்யலாம் வாங்க!

 


தீபாவளிக்கு பூசணிக்காய் பர்பி:

தேவைான பொருட்கள்:

  • பூசணக்காய் - அரை கிலோ
  • பாலாடை - 500 கிராம்
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு
  • தண்ணீர் - தேவைக்கு ஏற்ப
  • நெய் - 150 கிராம்
  • சில்வர் லீவ்- 5

மேலும் படிக்க: பாரம்பரிய அரிசியில் தீபாவளி பலகாரங்கள் செய்யலாம் வாங்க; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

செய்முறை:

  • தீபாவளிக்கு பூசணிக்காயைக் கொண்டு பர்பி செய்கிறீர்கள் என்றால் முதலில் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் தோலை நீக்கி நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து ஒரு கனமாக கடாயில் நெய் ஊற்றி சூடேற்றவும். ஓரளவிற்கு சூடானதும் ஏற்கனவே மசித்து வைத்துள்ள பூசணிக்காயையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பூசணிக்காயின் ஈரத்தன்மை ஓரளவிற்குப் போகும் வரை அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

  • இதனுடன் சர்க்கரை சேர்த்து ஓரளவிற்கு கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் பாலாடை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறவும். தற்போது பஃர்பி செய்வதற்கான கலவை ரெடி.
  • இதை நெய் தடவிய தட்டில் மாற்றிக் கொள்ளவேண்டும். இதன் மேல் சில்வர் இலைகளை அழுத்திக் கொண்டால் ஒரு வடிவத்திற்கு வரகூடும். இதை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலான குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
  • பின்னர் வெளியில் எடுத்து உங்களுக்கு எந்தளவிற்கு பர்பி தேவையோ? அந்தளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தால் போதும். ஆரோக்கியம் மற்றும் சுவை கலந்த பூசணிக்காய் பர்பி ரெடி.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com