herzindagi
image

மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற பன்தோசை; எளிய செய்முறை விளக்கம் இங்கே!

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது பன் தோசை செய்துப் பாருங்கள்.
Editorial
Updated:- 2025-10-10, 23:25 IST

குழந்தைகளுக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் செய்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் என்ன செய்துக் கொடுப்பது என்ற குழப்பம் நிச்சயம் அதிகளவில் இருக்கும். இனி கவலை வேண்டாம். இதோ உங்களுக்காகவே எப்படி மிகவும் சுலபமாக பன் தோசையை வீட்டிலேயே செய்யலாம்? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!



பன் தோசை செய்ய தேவையான பொருட்கள்:

  • ரவை - 1 கப்
  • தயிர் - 1 கப்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு- அரை டீஸ்பூன்
  • சீரகம் - அரை டீஸ்பூன
  • உளுந்து - அரை டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு- சிறிதளவு
  • இஞ்சி - சிறிதளவு
  • வெங்காயம் - 3
  • கேரட் துருவல் - அரை கப்
  • பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • தண்ணீர் - தேவையான அளவு

மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!



பன் தோசை செய்முறை:

  • சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பன்தோசை செய்வதற்கு முதலில் ஒரு கப் ரவை தண்ணீர் சேர்த்து சுமார் 20 நிமிடங்களுக்கு நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் கடுகு, சீரகம், உளுந்து, இஞ்சி போன்றவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • கொஞ்சம் சூடு ஆறியவுடன் கேரட் துருவல் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற வைத்த ரவை மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: புரோட்டீன் நிறைந்த காலை உணவுகள் என்னென்ன தெரியுமா? சுலபமாக செய்யும் முறை இங்கே!



  • இதனுடன் அரைத்து வைத்துள்ள கேரட் துருவல் கலவையை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதை ஒரு மணி நேரத்திற்கு ஊற வைத்தால் தோசை கொஞ்சம் மெதுவாக இருக்கும்.
  • ஒருவேளை உங்களுக்கு அவசரமாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் மாவு கலந்தவுடன் தோசை ஊற்றிக் கொள்ளலாம்.
  • வழக்கமான தோசைக்கல்லில் ஊற்றுவது போன்றில்லாமல் குழியான தாளிப்பு கரண்டி
  • அல்லது ஒன்றரை கப் மாவு ஊற்றிக் கொள்ளவும்.
  • கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பன் தோசை ரெசிபி ரெடி.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com