herzindagi
image

தயிர் சாதத்திற்கு சுவையை அதிகரிக்கும் முருங்கைக் காய் ஊறுகாய்; செய்முறை விளக்கம் இதோ!

தயிர் சாதம், பழைய சாதம் போன்றவற்றிற்கு கூடுதல் சுவையைக் கொடுக்க வேண்டும் என்றால் ஒருமுறையாவது முருங்கைக்காய் வைத்து ஊறுகாய் செய்துப் பாருங்கள்.
Editorial
Updated:- 2025-10-31, 21:17 IST

நமது வீட்டுச் சமையல் அறையில் ஊறுகாய் இருந்தால் போதும். நாவிற்கு சுவையைக் கொடுத்து அனைத்து சாதங்களையும் கொஞ்சம் அதிகமாக சாப்பிட வைத்துவிடும். இதனால் தான் பலரது இல்லங்களில் மாங்காய் ஊறுகள், பூண்டு ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய் என விதவிதமாக செய்வார்கள். இல்லை கட்டாயம் அனைவரது வீடுகளிலும் ஏதாவது ஒரு ஊறுகாய் இருக்கும். இதுபோன்ற ஊறுகாய்களின் வரிசையில் முருங்கைக்காய் ஊறுகாயும் இடம் பெற்றுவிட்டது. இரும்புச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களைக் கொண்ட முருங்கைக்காய் வைத்து செய்யப்படும் ஊறுகாய்கள், சுவையைக் கொடுப்பதோடு உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. இந்த ஊறுகாயை ஒருமுறையாவது செய்தது இல்லையென்றால் இதோ அதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.

மேலும் படிக்க: கர்ப்பிணிகள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்; அத்துணை நன்மைகள் கொட்டிக்கிடக்குது!

முருங்கைக்காய் ஊறுகாய் :

தேவையான பொருட்கள்:

  • முருங்கைக்காய் - 4
  • கடுகு - 2 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் - 7
  • பூண்டு - 1
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • நெல்லிக்காய் - 1
  • மிளகாய்த்தூள் - சிறிதளவு
  • நல்லெண்ணெய் - தேவையான அளவு

மேலும் படிக்க: 6 மாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த செர்லாக்; வீட்டிலேயே தயார் செய்யும் முறை!

முருங்கை ஊறுகாய் செய்முறை:

  • உடலுக்கு ஆற்றலை அளிக்கும் முருங்கை ஊறுகாய் செய்வதற்கு முதலில், ஒரு கடாயில் கடுகு வெந்தயத்தை நன்கு வறுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் அரைத்து பவுடராக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி புளிக்கரைசலை சேர்த்துக் கொண்டு, கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

மேலும் படிக்க: 10 நிமிடங்களில் சுவையான சிப்பி காளான் வறுவல் செய்யலாமா? எளிய செய்முறை இங்கே!

  • பின்னர் அதே கடாயில் நல்லெண்ணெய்யை ஊற்றி முருங்கைக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வத்தல் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • இதனுடன் வறுத்து வைத்த முருங்கைக்காய், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தய பொடியை சேர்த்து ஒரு 10 நிமிடங்களுக்குக் கிளறிக் கொண்டே இருந்தால் போதும். சுவையான முருங்கைக்காய் ஊறு ரெடி.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com