herzindagi
image

கீழே உட்கார்ந்து எழ முடியாத அளவிற்கு மூட்டு வலியா? கால்சிய சத்துக்கள் கொண்ட லட்டு செய்து சாப்பிடுங்க!

நம்மில் பலருக்கு அதிக நேரம் நின்றாலும், கீழே உட்கார்ந்து எழுந்திருத்தாலும் மூட்டு வலி அதிகமாக இருக்கும். கால்சியம் குறைபாடு இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இவற்றை சரி செய்ய கால்சியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த லட்டுக்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-09-09, 16:42 IST

பெண்கள் அதிகம் சந்திக்கும் முக்கிய உடல் நல பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது மூட்டு வலி மற்றும் முதுகு வலி. நாள் முழுவதும் பம்பரம் போன்று சுற்றித் திரியும் பெண்களுக்கு இரவில் படுக்கும் போது ஏற்படும் வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதிலும் காலையில் எழுந்திருக்க முடியாத அளவிற்கு முதுகு தண்டுவட பகுதியில் வலியை உணர்வார்கள். சில நேரங்களில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியாத அளவிற்கும் மூட்டு வலி பிரச்சனையையும் பெண்கள் சந்திப்பார்கள். இவற்றிற்கெல்லாம் முக்கிய காரணமாக கால்சியம் குறைபாடு என்கின்றனர் மருத்துவர்கள். இவற்றை சரி செய்வதற்காக ஒருபுறம் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டாலும் இவையெல்லாம் நிரந்தர தீர்வாக அமையாது. மாறாக நமது உணவு முறையின் மூலம் கால்சியம் குறைபாட்டை சரி செய்ய முடியும். இதோ அதற்கான ஒரு சூப்பரான ரெசிபி இங்கே.

மேலும் படிக்க: ஓவன் வேண்டாம் பணியார சட்டியில் சுவையான சாக்லேட் கேக் செய்யலாம் தெரியுமா? எளிய செய்முறை இங்கே

கால்சியம் சத்துக்கள் நிறைந்த லட்டு:

தேவையான பொருட்கள்:

  • கருப்பு உளுந்து - 1 கப்
  • வெள்ளை எள் - அரை கப்
  • பாசிப்பருப்பு - கால் கப்
  • பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு
  • பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - 1 கப்
  • நெய் - 100 கிராம்

மேலும் படிக்க: குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வெல்லம் தோசை; சுலபமாக செய்யும் முறை

கால்சியம் லட்டு செய்முறை:  

  • பெண்களுக்கு முதுகு வலி மற்றும் மூட்டு வலியை நீக்கும் லட்டு செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் கருப்பு உளுந்தப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதாக அதே கடாயில் வெள்ளை எள்ளையும் வறுத்து மாற்றி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசி போன்றவற்றையும் தனித்தனியாக வறுத்து ஏற்கனவே உள்ள பொருட்களுடன் சேர்த்து வைக்கவும்.
  • இதனுடன் சிறிதளவு நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்துக் கொண்ட பின்னதாக மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • இறுதியாக இவற்றை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றிய பின்னதாக, நெய்யை காய்ச்சி கலவையில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: குழந்தைகள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல ஆரோக்கியமான கேரட் பேன்கேக்; செய்முறை விளக்கம் இதோ

  • கை சூடு தாங்கும் அளவிற்கு கவையை கையில் எடுத்துக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் போதும். கால்சியம் குறைபாட்டைப் போக்கும் லட்டு ரெடி.
  • உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட வேண்டும். பெண்களின் எலும்புகளுக்கு வலிமையைத் தருகிறது.

 


கால்சியம் லட்டும் ஆரோக்கிய நன்மைகளும்:

  • கருப்பு உளுந்தில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்ரஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் வளரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. குறிப்பாக பிரசவத்திற்குப் பின்னதாக பெண்கள் அனுபவிக்கும் முதுகு வலிக்கு சிறந்த தீர்வு.
  • உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க உதவுகிறது.
  • நெய் சேர்த்து செய்யும் இந்த லட்டு மூளை வளர்ச்சி உதவியாக உள்ளது.
  • பனை மரத்திலிருந்து பெறப்படும் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்க்கும் போது உடலுக்கு குளிர்ச்சி தருகிறது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com