herzindagi
image

குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வெல்லம் தோசை; சுலபமாக செய்யும் முறை

வெல்லத்தில் கால்சியம், பொட்டாசியம், புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
Editorial
Updated:- 2025-09-07, 21:24 IST

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் பல நேரங்களில் அதீத அக்கறை காட்டுவதில்லை. பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வேலைக்கு செல்லும் அவசரத்தில் ஏதோ உணவுகளைச் செய்துக் கொடுத்துவிடுகிறோம். இல்லையென்றால் தோசை, இட்லி போன்றவற்றை காலை அல்லது இரவு நேரங்களில் சாப்பிடுகிறோம். ஒரே மாதிரியான உணவுப்பொருட்களை சாப்பிட்டு சளிப்பாகி இருந்தால், ஒருமுறையாவது வெல்லத்தைப் பயன்படுத்தி தோசை செய்துப் பாருங்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வெல்லம் தோசை:

குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் தோசைகளைத் தவிர்த்து வேறு ஏதேனும் உணவுப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாவது வெல்லம் கொண்டு தோசை செய்துப் பாருங்கள். சுவை மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு - 2 டம்ளர்
  • அரிசி மாவு- 1 டம்ளர்
  • வெல்லம் - 3 கப்
  • நெய் - தேவையான அளவு
  • தேங்காய் துருவல் - சிறிதளவு
  • ஏலக்காய் தூள் - சிறிதளவு

வெல்லம் தோசை செய்முறை:

  • வெல்லத்தைப் பயன்படுத்தி சுவையான தோசை செய்வதற்கு முதலில், வெல்லத்தைத் தட்டி தூசி இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சூடாக்கி அந்த கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து தோசை சுடும் பதத்திற்கு கரைந்துக் கொள்ள வேண்டும். இப்போது வெல்லம் தோசை செய்வதற்கான மாவு ரெடி.

 

  • இறுதியாக தோசைக் கல்லை சூடாக்கி, குழந்தைகள் சாப்பிடும் வகையில் ஹார்ட் தோசை, வட்ட வடிவிலான சிறிய தோசை, நிலா போன்ற வடிவங்களில் மாவை ஊற்றிக் கொள்ளவும்.
  • நெய் சேர்த்து இருபுறமும் வேக வைத்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த வெல்லம் தோசை ரெடி.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com